அன்பழகன் மறைவை அடுத்து தி.மு.க.வின் பொது செயலாளராக யார் நியமிக்கப்படுவார் என்ற கேள்வி அக்கட்சி தொண்டர்களிடையே எழுந்துள்ளது.
கடந்த திமுக பொதுக்குழு கூட்டத்தில் பொது செயலாளரின் சில முக்கிய அதிகாரங்கள், கட்சி தலைவர் ஸ்டாலினுக்கு வழங்கப்பட்டது.
இந்நிலையில் விரைவில் திமுக பொது செயலாளர் நியமிக்கப்படலாம் என்று தகவல் வெளியாகியுள்ளது.
இப்பதவிக்கு திமுக பொருளாளர் துரைமுருகன் அல்லது துணை பொது செயலாளர் பெரியசாமி நியமிக்கப்படலாம் என்று கூறப்படுகிறது.
துரைமுருகன் பொது செயலாளராக நியமிக்கப்பட்டால், பொருளாளர் பதவிக்கு முன்னாள் அமைச்சர் ஏ.வ. வேலு , திமுக எம்.பி. டி ஆர் பாலு , முதன்மை செயலாளர் கே.என்.நேரு ஆகிய 3 பேரில் ஒருவர் நியமிக்கப்படலாம் என்று அறிவாலய வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.