நேஷனல் ஹெரால்ட் வழக்கில் காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி, எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்திக்கு நோட்டீஸ் வழங்க டெல்லி உயர் நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. அமலாக்கத்துறையின் மனுவில் முக்கிய ஆவணங்கள் இல்லை எனக்கூறி நோட்டீஸ் வழங்க நீதிபதிகள் மறுப்பு தெரிவித்துள்ளனர். விடுபட்ட ஆவணங்களை அமலாக்கத்துறை தாக்கல் செய்த பிறகு முடிவு செய்யலாம் என டெல்லி உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.