அரக்கோணம் அருகே ரயில் தண்டவாள இணைப்புகளில் உள்ள போல்ட்டுகள் கழற்றப்பட்டிருந்ததால் அதிர்ச்சி. திருவாலங்காடு ரயில் நிலையத்தில் தண்டவாள இணைப்புகளில் இருந்த போல்ட்டுகள் கழற்றப்பட்டு கிடந்தன. சென்னை-அரக்கோணம் மார்க்கத்தில் போல்ட் கழற்றி இருந்ததால் ரயிலை கவிழ்க்க சதியா என சந்தேகம் எழுந்துள்ளது. கடந்த ஆண்டு கவரப்பேட்டை ரயில் நிலையத்தில் போல்ட்டுகள் கழற்றப்பட்டதால் ரயில் தடம்புரண்டு விபத்து ஏற்பட்டது.