துணைவேந்தர்கள் மாநாட்டில் துணைவேந்தர்களை பங்கேற்க விடாமல் செய்தது அவசரகாலத்தை நினைவூட்டுகிறது. துணைவேந்தர்களை தடுக்க காவல்துறையை முதல்வர் ஸ்டாலின் பயன்படுத்தியுள்ளார். தமிழகத்தில் காவல்துறை ராஜ்ஜியமா நடக்கிறது? மாநிலத்திற்குள் நடைபெறும் கல்வி மாநாட்டில் பங்கேற்க துணைவேந்தர்களுக்கு சுதந்திரம் இல்லையா? என ஆளுநர் ஆர்.என்.ரவி தமிழக அரசை சாடியுள்ளார்