குமரி மாவட்டம் களியக்காவிளை சோதனை சாவடியில் சிறப்பு சப் இன்ஸ்பெக்டரை சுட்டுக்கொன்றது யார் என்பது குறித்து கியூ பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மார்த்தாண்டம் வடக்கு தெருவை சேர்ந்த சிறப்பு சப்இன்ஸ்பெக்டர் வில்சன் மர்ம நபர்களால் சுட்டுக்கொல்லப்பட்டார். இவர் களியக்காவிளை சோதனை சாவடியில் தனியாக பணிபுரிந்துள்ளார். வருகிற மே மாதம் ஓய்வு பெறவுள்ளார். பணிகாலம் 4 மாதங்கள் மட்டும் உள்ள நிலையில் அவர் சுட்டுகொல்லப்பட்டுள்ளார். சம்பவ இடத்திற்கு எஸ்பி ஸ்ரீநாத் நேரில் சென்று பார்வையிட்டார்.தென்இந்தியாவில் பயங்கரவாதத்திற்கு திட்டமிட்ட 3 பேரை பெங்களூரில் வைத்து தமிழக கியூ பிரிவு போலீசார் நேற்று கைது செய்தனர். முகமது கனிப்கான், முகமது சையது உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டு இருந்தனர். இவர்கள் கைது செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் இந்த துப்பாக்கி சூடு சம்பவம் நடந்ததா? என்ற கோணத்தில் கியூ பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். துப்பாக்கி சூடு நடந்த இடத்தில் தமிழக மற்றும் கேரள போலீசார் விசாரணை தொடங்கியுள்ளனர்*
சப் இன்ஸ்பெக்டரை சுட்டுக்கொன்றது யார்?
RELATED ARTICLES