மதுரை அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டி: 21 வயதுக்கு குறைவானோர் அனுமதியில்லை
மதுரை: மதுரை அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியில் 21 வயதுக்கு குறைவானோர் மாடுகளை பிடிக்க அனுமதியில்லை. ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்போர் 21 முதல் 45 வயதுக்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும் என ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். ஜனவரி 17ல் நடைபெறும் ஜல்லிக்கட்டில் பங்கேற்க விரும்பும் மாடுபிடி வீரர்களுக்கு நாளை உடற்தகுதி பரிசோதனை நடைபெற உள்ளது.