ஸ்ரீ நகரில் வைக்கப்பட்டுள்ள தீவிரவாதிகள் தாக்குதலில் உயிரிழந்தோர் உடல்களுக்கு ஒன்றிய அமைச்சர் அமித் ஷா மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். பின்னர் நண்பகல் 12 மணிக்கு ஒன்றிய அமைச்சரவை கூட்டம் நடைபெற உள்ளது. பிரதமர் இல்லத்தில் நடைபெறும் கூட்டத்தில் ஒன்றிய அமைச்சர்கள் ராஜ்நாத் சிங், ஜெய்சங்கர் மற்றும் அதிகாரிகள் பங்கேற்க உள்ளனர்.