உள்ளாட்சி அமைப்புகளில் மாற்றுத்திறனாளிகளுக்கு உரிய பிரதிநிதித்துவம் வழங்க சட்ட முன்வடிவை பேரவையில் முதலமைச்சர் அறிமுகம் செய்தார்.
உள்ளாட்சி அமைப்புகளில் நேரடி பிரதிநிதித்துவம் மூலம் 12,000 மாற்றுத்திறனாளிகளுக்கு வாய்ப்பு கிடைக்கும் – முதலமைச்சர்.
இந்த சட்ட முன்வடிவை அறிமுகம் செய்வதில் வாழ்நாள் பெருமை அடைகிறேன்.
அருந்ததியர்களுக்கான உள் இட ஒதுக்கீடு சட்ட முன்வடிவை முன்மொழியும் வாய்ப்பை கலைஞர் எனக்கு வழங்கினார்.
அப்போது எப்படி பெருமை அடைந்தேனோ, அதே பெருமையை இப்போது அடைகிறேன்- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.