லக்னோவில் முன்னாள் பிரதமர் வாஜ்பாய் சிலையை திறந்து வைத்தார் பிரதமர் நரேந்திர மோடி
லக்னோ: லக்னோவில் முன்னாள் பிரதமர் வாஜ்பாய் சிலையை பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்தார். லக்னோவில் வாஜ்பாய்க்கு 25 அடி உயர வெண்கல சிலை நிறுவப்பட்டு உள்ளது. வாஜ்பாய் சிலையை திறந்து வைத்த பிரதமர் மோடி, மலர் தூவி மரியாதை செலுத்தினார்.