நீட் தேர்வை ரத்து செய்வோம் என்று 2021 தேர்தல் வாக்குறுதி கொடுத்தது உண்மை. மத்தியில் எங்கள் கூட்டணியில் ஆட்சி அமைந்திருந்தால் நிச்சயம் ரத்து செய்திருப்போம். தற்போது நீங்கள் கூட்டணி அமைத்திருக்கிறீர்கள். நீட் தேர்வை ரத்து செய்தால் தான் கூட்டணியில் இருப்போம் என்று சொல்ல அதிமுகவுக்கு தகுதி உள்ளதா என சட்டப்பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பினார்.