தமிழ்நாடு முழுவதும் உள்ள குடும்ப நல நீதிமன்றங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. கோடை விடுமுறையொட்டி, வரும் மே 1ம் தேதி முதல் மே 15ம் தேதி வரை தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மாநிலங்களில் உள்ள குடும்ப நல நீதிமன்றங்களுக்கு 15 நாட்கள் விடுமுறை என சென்னை உயர் நீதிமன்ற தலைமை பதிவாளர் அல்லி அறிவிப்பு வெளியிட்டார். சென்னை உயர் நீதிமன்ற பெண் வழக்கறிஞர்கள் சங்கத்தின் கோரிக்கையினை ஏற்று விடுமுறை அறிவிப்பு வெளியாகி உள்ளது.