தினசரி ஆவின் பால் விற்பனை 22.50 லட்சம் லிட்டரில் இருந்து 25 லட்சம் லிட்டராக அதிகரிப்பு
சென்னை: தினசரி ஆவின் பால் விற்பனை 22.50 லட்சம் லிட்டரில் இருந்து 25 லட்சம் லிட்டராக அதிகரித்துள்ளது என ஆவின் நிறுவனம் தகவல் தெரிவித்துள்ளது. மளிகை கடையில் ஆவின் முகவர் நியமனத்திற்கான வைப்புத் தொகை ரூ.1,000 குறைக்கப்பட்டுள்ளது எனவும் கூறியுள்ளது.