கலைஞர் என்றாலே இந்து மத விரோதி என்றும், அவர் கோயில்களை இழுத்து மூடுவதையே வழக்கமாக கொண்டவர் என்றும், திராவிட ஆட்சிகளினாலும் இந்து சமய அறநிலையத் துறையினாலும் எல்லாமே குடி மூழ்கிப்போனது என்றும் கூக்குரல்கள் எழுவது வழக்கமே!
எதிரிகளால் கலைஞரை சுற்றி பின்னப்பட்ட எத்தனையோ பொய் வலைகளில் இதுவும் ஒன்று.

அது எப்படி பொய்யாக இருக்கும்? அவர் தான் நாத்திகர் ஆயிற்றே என்பீர்கள்!
அவர் நாத்திகர் தான், அதை அவர் என்றும் மறைத்ததில்லை. ஆனால் ஒரு மாநிலத்தின் முதல்வராக அவர் பணியாற்றிய போதெல்லாம் அவர் எப்படி செயல்பட்டிருக்கிறார் என்று பாருங்கள். அப்போது தான் தெரியும் அவரின் உயரம்.
அவர் முதல்வராக பணியாற்றிய காலத்தில், இந்து சமய அறநிலையத்துறை மூலமாக நடந்தவை ✒️
♦ முதல்வர் தலைமையில், அறநிலையத் துறை அமைச்சர், அறநிலையத் துறைசெயலாளர், அறநிலையத் துறை ஆணையர், குன்றக்குடி ஆதினம், திருப்பனந்தாள் ஆதினம், திருவாவடுதுறை ஆதினம், திருவரங்கம் ஸ்ரீமத் ஆண்டவன் சுவாமிகள், பேரூர் சாந்தலிங்க ராமசாமி அடிகள், திருமதி சௌந்தரம் கைலாசம், மேனாள் நெல்லை மேயர் உமா மகேஸ்வரி, கருமுத்து கண்ணன் ஆகியோர் அடங்கிய தமிழ்நாடு இந்து சமய அறநிலைய ஆட்சித் துறை அமைப்பு, 1996
♦ புரவலர் விருது & தங்க நிற அட்டை திட்டம் – ரூ.5 லட்சம் நன்கொடை வழங்குபவர்களுக்கு திருக்கோயில் புரவலர் என்ற பட்டமும், அரசு சான்றிதழும், தங்க நிறத்திலான அட்டையும் வழங்க அரசு உத்தரவு. அவர்கள் குடும்பத்தினர் 5 பேருக்கு அறநிலையத்துறை கட்டுபாட்டிலுள்ள திருக்கோயில்களில் 20 வருடங்கள் சிறப்பு தரிசன அனுமதி வழங்கவும் உத்தரவு. 48 புரவலர்கள் மூலம் ரூ.2.40 கோடி நிதி திரட்டல், 2006-2011
✅ திருக்கோயில் குடமுழுக்கு விழாக்கள் :
1️⃣. மயிலை கபாலீஸ்வரர் திருக்கோயில், 1996
2️⃣. திருப்பெரும்புதூர் ஆதிகேசவ பெருமாள் கோயில், 1997
3️⃣. திருநீர்மலை ரங்கநாத சுவாமி திருக்கோயில், 1997
4️⃣. திருப்பாப்புலியூர் பாடலீஸ்வரர் திருக்கோயில், 1997
5️⃣. திருக்கடவூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோயில், 1997
6️⃣. கடலூர் திருவேந்திரபுரம் தேவநாதசுவாமி திருக்கோயில், 1997
7️⃣. தஞ்சை பெரிய கோயில், 1997
8️⃣. சென்னை மல்லீஸ்வரர் திருக்கோயில், 1997
9️⃣. வேலூர் ஜலகண்டேஸ்வரர் திருக்கோயில், 1997
🔟. சோளிங்கர் லட்சுமி நரசிம்மர் திருக்கோயில், 1998
1️⃣1️⃣. திருவெண்காடு சுவேதாரண்யேசுவரர் திருக்கோயில், 1998
1️⃣2️⃣. பெரியபாளையம் பவானியம்மன் திருக்கோயில், 1998
1️⃣3️⃣. ஆழ்வார் திருநகரி அரவிந்தலோசனர் திருக்கோயில், 1998
1️⃣4️⃣. சென்னகேசவ பெருமாள் திருக்கோயில், 1999
1️⃣5️⃣. வல்லக்கோட்டை முருகன் திருக்கோயில், 1999
1️⃣6️⃣. கும்பகோணம் சாரங்கபாணி திருக்கோயில், 1999
1️⃣7️⃣. திருவேற்காடு தேவி கருமாரியம்மன் திருக்கோயில், 1999
1️⃣8️⃣. கும்பகோணம் ஆதி கும்பேஸ்வரர் திருக்கோயில், 1999
1️⃣9️⃣. ஆழ்வார் திருநகரி ஆதிநாதாழ்வார் திருக்கோயில், 2000
2️⃣0️⃣. குறுங்காலீஸ்வரர் திருக்கோயில், 2000
2️⃣1️⃣. மதுரை காளமேக பெருமாள் திருக்கோயில், 2000
2️⃣2️⃣. அகத்தீஸ்வரர் திருக்கோயில், 2000
2️⃣3️⃣. வேதாரண்யம் வேதாரண்யேஸ்வரர் திருக்கோயில், 2000
2️⃣4️⃣. தொட்டியம் வேதநாராயண பெருமாள் திருக்கோயில், 2000
2️⃣5️⃣. திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் திருக்கோயில், 2000
2️⃣6️⃣. பழனி தண்டாயுதபாணி திருக்கோயில், 2000
2️⃣7️⃣. திருப்பரங்குன்றம் சுப்பிரமணியசுவாமி திருக்கோயில், 2000
2️⃣8️⃣. பவானி சங்கமேசுவரர் திருக்கோயில், 2000
2️⃣9️⃣. காங்கேயம் சுப்ரமணியசுவாமி திருக்கோயில், 2000
3️⃣0️⃣. திருச்சி மலைக்கோட்டை தாயுமானவர் சுவாமி திருக்கோயில், 2000
3️⃣1️⃣. திருமுட்டம் பூவராகசுவாமி திருக்கோயில், 2000
3️⃣2️⃣. சுவாமிமலை சுவாமிநாதசுவாமி திருக்கோயில், 2000 உள்ளிட்ட “4,724” கோயில்களில் குடமுழக்கு.
3️⃣3️⃣. தமிழகம் முழுவதும் 842 கோயில்களில் பல்வேறு திருப்பணிகள்.
3️⃣4️⃣. ஆதிதிராவிடர், பழங்குடியினர் & பிற்படுத்தப்பட்டோர் வாழும் பகுதிகளில் உள்ள அறநிலையத்துறையின் கீழ் வராத 6350 கோயில்களில் புனரமைப்பு திருப்பணிகள்
3️⃣5️⃣. கிராமப்புற திருக்கோயில்கள் திருப்பணிகளுக்கு ரூ.85000/- நிதி உதவி

✅ கோயில் சுற்றுப்புற மேம்பாடு :
1️⃣. நிதிவசதி இல்லாத கோயில்களுக்கு அரசின் சார்பில் இலவச மின்விளக்கு
2️⃣. திருக்கோயில்களின் 2324 குளங்களில் 1146 குளங்கள் தூர்வாரல், படிக்கட்டுகள் செப்பனிடல் & மழை நீர் சேமிப்பு ஏற்படுத்துதல்
3️⃣. அண்ணா நூற்றாண்டு நிறைவு விழாவை முன்னிட்டு காஞ்சி ஏகாம்பரேசுவரர் திருக்கோயிலுக்கு சொந்தமான திருகுளத்தை சீரமைக்க ரூ.43.90 லட்சம், அருள்மிகு அஷ்டபூஜ பெருமாள் கோயிலுக்கு சொந்தமான ரங்கசாமி குளத்தினை சீரமைக்க ரூ.22.50 லட்சம் நிதி ஒதுக்கல்
4️⃣. இந்து அறநிலையத்துறை அமைச்சர் தலைமையில் 50 முக்கிய திருக்கோயில்களில் உள்ள பழங்கால மூலிகை ஓவியங்களை பாதுகாக்க ரூ.20 லட்சம் செலவில் நடவடிக்கை
✅ கோயில்களில் தமிழ் :
1️⃣. தமிழில் வழிபாடு, தமிழில் வேள்வி 1998
2️⃣. சைவத் திருமுறை ஆகமங்கள், வைணவ திவ்விய பிரபந்த பயிற்சி மையங்கள், 1998-99
3️⃣. திருக்கோயில் ஆகம விதிகள் அடங்கிய உத்ரகாமிக ஆகமம் நூலை, 1999
4️⃣. தமிழ் போற்றி அர்ச்சனை புத்தகங்கள் வெளியீடு, 1999
5️⃣. சைவத் திருக்கோயில்கள் 5-ல் தேவார இசைப் பள்ளிகள்
6️⃣. வைணவத் திருக்கோயில்கள் 4-ல் பிரபந்த இசைப் பள்ளிகள்
7️⃣. 8 திருக்கோயில்களில் நாதஸ்வரம் & தவில் பயிற்சி
8️⃣. 75 திருக்கோயில்களில் திருக்குறள் வகுப்புகள்
9️⃣. சிதம்பரம் நடராசர் தமிழ் திருமுறைகள் இசைத்தல்
🔟. அறநிலையத்துறை கட்டுப்பாட்டிலுள்ள அனைத்து கோயில்களின் தலப்புராண வரலாற்றை சேகரித்து அச்சுவடிவமாக்கி பதிப்பித்து வெளியிடுதல், 1989
✅ தங்க விமானங்கள், தங்கத்தேர் & மரத்தேர் பணிகள் :
1️⃣. இந்து அறநிலையத்துறை கட்டுப்பாட்டிலுள்ள திருக்கோயில்களில் புதிதாக 34 தங்கத் தேர்கள்
2️⃣. சமயபுரம் அருள்மிகு மாரியம்மன் திருக்கோயில் மூலவர் தங்க விமான மாற்றம், 2007
3️⃣. திருப்பெரும்புதூர் ஆதிகேசவ பெருமாள் திருக்கோயில் மூலவர் தங்க விமான மாற்றம், 2007
4️⃣. சோளிங்கர் லட்சுமி நரசிம்மர் திருக்கோயில் மூலவர் தங்க விமான மாற்றம், 2010
5️⃣. திருக்கோயில்களின் 241 மரத் தேர் புதுப்பிப்பு
6️⃣. திருவாரூர் தியாகராஜ சுவாமி திருக்கோயில் அம்பாளுக்கு புதிய திருத்தேர் அமைத்தல் & தேரோட்டம், 2008
✅ கோயில் சொத்து பாதுகாப்பு நடவடிக்கைகள் :
1️⃣. கோயில் நிலங்களை தனியாருக்கு விற்பதில்லை என்ற கொள்கை முடிவு
2️⃣. தமிழகம் முழுவதும் 8325 கோயில் சொத்து பதிவேடுகள் உருவாக்கம், 1996
3️⃣. தனியார் ஆக்ரமிப்பில் இருந்த திருத்துறைப் பூண்டியில் 621 ஏக்கர், பேரூரில் 250 ஏக்கர் உள்ளிட்ட கோயில் நிலங்கள் மொத்தம் 2745 ஏக்கர் கோயில் நிலங்கள் நேரடி மீட்பு
4️⃣. நீதிமன்ற நடவடிக்கைகள் வாயிலாக 1414 ஏக்கர் கோயில் நிலங்கள் மீட்பு
5️⃣. திருக்கோயில்களில் உள்ள உலோகத் திருமேனிகளை பாதுகாத்திட திருவொற்றியூர், திருத்தணி, விருதுநகர், விழுப்புரம் & தர்மபுரி உள்ளிட்ட 15 இடங்களில் உலோகத் திருமேனிகள் பாதுகாப்பு மையம்
6️⃣. மொத்தம் 532 திருக்கோயில்களில் களவு எச்சரிக்கை மணி பொருத்துதல்
7️⃣. மொத்தம் 59 திருக்கோயில்களில் CCTV பொருத்துதல்
8️⃣. திருக்கோயில்களின் சொத்துக்களை மீட்க தாக்கல் செய்யப்படும் வழக்குகளின் நீதிமன்ற கட்டணம் சொத்து மதிப்பில் 7.5 சதவிகிதம் என்று இருந்ததை மாற்றி அனைத்து வழக்குகளுக்கும் ஒரே கட்டணமாக ரூ.100/- என நிர்ணயித்து அரசு ஆணை, 2010
9️⃣. கோயில்களில் பக்தர்கள் வழங்கும் பருத்தி நூல் புடவை & வேட்டிகளை ஏலம் விடுவதை நிறுத்திவிட்டு, அவற்றை முதியோர், ஆதரவற்றோர் & கைம்பெண்களுக்கு இலவசமாக வழங்கும் திட்டம்
✅ பணியாளர் நியமனம் & நலன் :
1️⃣. ஓய்வூதிய நல நிதி, 1996
2️⃣. பணியாளர் சேமநல நிதி, 1997
3️⃣. பணியாற்றும் காலத்தில் இயற்கை எய்தும் பணியாளர்களுக்கு ரூ.2000/- இறுதி சடங்கு நிதி, 1997
4️⃣. பணியாளர்களின் மகன் திருமணத்திற்கு ரூ.6000, மகள் திருமணத்திற்கு ரூ.10000/-, 1997
5️⃣. மருத்துவப்படி, சீருடை சலவைப் படி, இருசக்கர வாகனம் வாங்க கடன், 1997
6️⃣. கோயில்களுக்கான 200 புதிய செயல் அலுவலர் பணியிடங்கள் தோற்றுவித்தல், 1998
7️⃣. ஆண்டுக்கு ஒரு லட்சத்திற்கு மேல் வருமானம் கொண்ட திருக்கோயில்களின் அனைத்து பணியாளர்களுக்கும் அகவிலைப்படி, 1998
8️⃣. திருக்கோயில் பணியாளர்களுக்கு குடும்ப பாதுகாப்பு நிதி, 1999
9️⃣. ஆண்டுக்கு ஒரு லட்சமும் அதற்கு மேலும் வருமானம் உள்ள கோயில்களின் பணியாளர்களுக்கு சிறப்பு வருங்கால வைப்பு நிதி திட்டம், 1999
🔟. திருக்கோயில் பணியாளர் மகன்/மகளுக்கு மொத்த மதிப்பெண்கள் அடிப்படையில் மடிக்கணனி வழங்குதல், 2010
1️⃣1️⃣. திருக்கோயில் பணியாளர் மகன்/மகளுக்கு மொத்த மதிப்பெண்கள் அடிப்படையில் உயர்கல்வி பயில நிதி உதவி, 2010
1️⃣2️⃣. திருக்கோயில் பணியாளர்கள் 2575 பேருக்கு ஒரே சீருடை & அடையாள அட்டை, 2010
1️⃣3️⃣. கிராம பூசாரிகள் 1146 நபர்களுக்கு ஓய்வூதிய திட்டம்
1️⃣4️⃣. ஒரு காலப் பூசை நடைபெறும் திருக்கோயில்களில் பணிபுரியும் அர்ச்சகர் & பூசாரிகள்10,000 பேருக்கு இலவச சைக்கிள், 2010
1️⃣5️⃣. மொத்தம் 49,240 கிராம பூசாரிகள் அடங்கிய நலவாரியம், 2010
1️⃣6️⃣. திருக்கோயில்களில் 150 தமிழ்ப் புலவர்கள் நியமனம்
1️⃣7️⃣. மங்களாசாசனம் செய்யப்பட்ட சரித்திர புகழ் வாய்ந்த கோயில்களில் 14 தவில், 30 நாதஸ்வரம், 4 தாளம் ஆகிய இசைக் கலைஞர்கள் 48 பேர் நியமனம்
1️⃣8️⃣. சைவத் திருமுறைகளான தேவாரம் திருவாசகம் பாட 43 திருக்கோயில்களில் ஓதுவார்கள் நியமனம்
✅ கோயில்கள் சார்ந்து மக்கள் நலப் பணிகள்:
1️⃣. திருக்கோயில்களின் உபரி நிதியிலிருந்து 10 கோடி மைய நிதியை உருவாக்கி திருக்கோயில்கள் மூலம் நடத்தப்படும் பள்ளிகள் & கல்லூரிகளுக்கு நிதி வசதி
2️⃣. திருக்கோயில்களில் ஆதரவற்ற இளம் சிறார்கள் கருணை இல்லம் திட்டத்தின் கீழ் 38 திருக்கோயில்கள் மூலம் 43 கருணை இல்லங்கள், 1975
3️⃣. திருக்கோயில் கருணை இல்ல மாணவ, மாணவியர்களுக்கு இலவச கணினி, தட்டச்சு & தையல் பயிற்சி
4️⃣. திருக்கோயில்களால் நடத்தப்படும் ஆரம்பப் பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவியர்களுக்கு இலவச சீருடை
5️⃣. நிதிவசதியும், இடவசதியும் உள்ள 114 முக்கிய திருக்கோயில்களில் நூல் நிலையங்கள் அமைத்தல்
6️⃣. பழனியில் ரூ.1 கோடி மதிப்பில் தானியங்கி இயந்திரங்கள் மூலம் பஞ்சாமிர்த தயாரிப்பு நிலையம்
7️⃣. திருவேற்காடு, சமயபுரம் ஆகிய திருக்கோயில்கள் சார்பில் திருமண மண்டபங்கள், 2007 & 2009
✅ திருவாரூர் ஆழித் தேர் :
அனைத்து துறைகளிலும் காலத்துக்கும் தன் பெயர் சொல்லும்படியான ஓர் சிறப்பு முத்திரையை பதித்துள்ள தலைவர் கலைஞர், அறநிலையத் துறையில் அப்படியான ஒரு முத்திரையை தன் சொந்த மாவட்டமான திருவாரூரில் பதித்துள்ளார்.
அது தான் திருவாரூர் தியாகராஜ சுவாமிகள் கோயில் ஆழித் தேர்.
நீண்ட நெடுங்காலமாக ஆத்திகர்கள் ஆண்ட இந்த மாநிலத்தில் திருவாரூர் தேர் ஓட்டம் 1948 ஆம் ஆண்டோடு நின்றுவிட்டது. எண்கோண வடிவத்தில் நாலு நிலைகளுடன் 96 அடி உயரமும் 360 டன் எடையும் கொண்ட ஆசியாவின் மிகப்பெரிய மரத்தால் ஆன ஆழித்தேரை, நாத்திகரான இவர் 1969ல் முதல்வரானவுடன் திருச்சி Bhel நிறுவனத்தின் உதவியுடன் செப்பனிட்டு, இரும்பு அச்சுகள், சக்கரங்கள் & Hydraulic Brake System எல்லாம் கொண்டதாக நவீனமயப்படுத்தி, 1970 ஆம் ஆண்டு ஓட வைத்து தமிழ்நாட்டுக்கும், திருவாரூருக்கும், தியாகராஜ சுவாமிக்கும் சிறப்பு சேர்த்தார்.
இவ்வளவு செய்த கலைஞரை, ஒரு சிறு கூட்டம் அவர் மறைவுக்கு பின்னரும் ஏன் தொடர்ந்து இந்து மத விரோதி என்று தூற்றுகிறது?
அதற்கு காரணம் கோயில்களில் அவர் செய்திருக்கும் சமுக நீதி சார்ந்த செயல்கள் தான்.

தன்னுடைய ஆட்சிக்காலத்தில் மக்களிடையே சமத்துவத்தை வலியுறுத்துவதற்காக அவர் கொண்டு வந்த சட்டங்கள்,
1️⃣. பரிவட்ட மரியாதை நிறுத்தம்
2️⃣. அறங்காவலர் குழுவில் ஆதி திராவிடர் & மகளிர்
3️⃣. அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம்
பரிவட்டம், அறங்காவலர் குழு பதவிகள், அர்ச்சர்கர் பணி, இந்த மூன்றுமே பரம்பரை பரம்பரையாக ஒரு குடும்பம், ஒரு சாதி என்ற குறுகிய வட்டத்திற்குள் இருந்த உரிமைகள். அதை இந்த மனிதன் சட்டத்தின் துணையுடன் பொதுமைப்படுத்தி எல்லாருக்குமான ஒன்றாக ஜனநாயகப்படுத்தி விட்டாரே என்ற கோபம் தான் அவர் மீதான வன்மமாக வளர்ந்து அவர் மறைவுக்கு பின்னரும் அவரை தூற்ற காரணமாகிவிட்டது.
கலைஞரின் வார்த்தைகளே தான் அவர்களுக்கான பதில். . .
கடவுளை கலைஞர் ஏற்கிறாரா இல்லையா என்பதல்ல கேள்வி.
கடவுள் என்றொருவர் இருந்தால் அவர் கலைஞரை ஏற்கிறாரா இல்லையா என்பது தான் கேள்வி.
அந்த கேள்விக்கான பதில் தான் அவர் செய்துள்ள, மேலே பட்டியலிடப்பட்டுள்ள பணிகள்.
பதிவு : A.Sivakumar