சேலம் : சேலத்தில் புதிதாக திறக்கப்பட்ட ஈரடுக்கு மேம்பாலத்தில் செல்பியோ, வீடியோவோ எடுக்கக்கூடாது என மாநகர காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. போக்குவரத்துக்கு இடையூறாக ஈரடுக்கு மேம்பாலத்தில் செல்பி, வீடியோ எடுக்கக்கூடாது என்றும் காவல்துறை எச்சரித்துள்ளது. இதை மீறுவோர் மீது, சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்’ என்றும் போலீஸ் கமிஷனர் அலுவலகம் அறிக்கை வெளியிட்டுள்ளது. சேலம் குரங்குச்சாவடி முதல் அண்ணா பூங்கா வரையிலான ஈரடுக்கு மேம்பாலம், லீ-பஜார் மேம்பாலங்களை முதல்வர் பழனிசாமி நேற்று திறந்து வைத்தார்.சேலம், ஈரடுக்கு மேம்பாலம், நேற்று, மக்கள் பயன்பாட்டுக்கு வந்தது.