Tuesday, July 1, 2025
Google search engine
HomeNewsராணுவ பலம் யாருக்கு அதிகம்?.. இந்தியா – பாகிஸ்தான் இடையே போர் பதற்றம்: நேசக்கரம் நீட்டும்...

ராணுவ பலம் யாருக்கு அதிகம்?.. இந்தியா – பாகிஸ்தான் இடையே போர் பதற்றம்: நேசக்கரம் நீட்டும் உலக நாடுகள்

இந்திய விமானப்படை

இந்திய விமானப்படையில் 3 லட்சத்து 10 ஆயிரம் வீரர்கள் இருக்கின்றனர். பாகிஸ்தானில் 78 ஆயிரம் விமானப்படை வீரர்கள் இருக்கின்றனர்.

விமானங்களின் வலு

இந்தியாவில் 2,229 விமானங்கள் இருக்கின்றன. பாகிஸ்தானில் 1,399 விமானங்கள் இருக்கின்றன.

போர் விமானங்கள்

இந்தியாவில் 513 போர் விமானங்கள் இருக்க, பாகிஸ்தானில் 328 இருக்கின்றன.

ராணுவ ஹெலிகாப்டர்

இந்தியாவில் 899 ராணுவ ஹெலிகாப்டர்கள் இருக்க, பாகிஸ்தானில் 373 ஹெலிகாப்டர்கள் உள்ளன.

ராணுவ தாக்குதல் ஹெலிகாப்டர்

இந்தியாவில் 80 தாக்குதல் ஹெலிகாப்டர்களும், பாகிஸ்தானில் 57 தாக்குதல் ஹெலிகாப்டர்களும் இருக்கின்றன.

போருக்கு பயன்படும் கவச வாகனம்

இந்தியா 1 லட்சத்து 48 ஆயிரம் வாகனங்களை வைத்திருக்கிறது. பாகிஸ்தான் 17 ஆயிரம் கவச வாகனங்களை வைத்திருக்கிறது.

பீரங்கி வண்டிகள்

இந்தியா 4 ஆயிரத்து 201 பீரங்கி வண்டிகளை வைத்திருக்க, பாகிஸ்தான் 2,627 பீரங்கிகளை வைத்திருக்கிறது.

நீர்மூழ்கி கப்பல்கள்

இந்தியா 18 நீர்மூழ்கி கப்பல்களையும், பாகிஸ்தான் 8 கப்பல்கள் வைத்திருக்கிறது.

மனித வளம் மற்றும் போர் உபகரணங்களில் பாகிஸ்தானை விட இந்தியாவை வலுவான நிலையில் இருக்கிறது.

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

- Advertisment -
Google search engine

Cinima World