குரூப் 1, குரூப் 2 உட்பட அரசு பணியிடங்களுக்கான வருடாந்திர தேர்வுக்கால அட்டவணையை டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ளது.
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) சார்பில் ஆண்டுதோறும்
அரசு பணியிடங்களுக்கான தேர்வுக் கால அட்டவணை வெளியிடப் படும்.
அந்தவகையில் 2020-ம் ஆண்டுக்கான வருடாந்திர தேர்வுக்கால அட்டவணை
டிஎன்பிஎஸ்சி இணையதளத்தில் (www.tnpsc.gov.in) நேற்று வெளியானது. அதில்
ஜனவரி முதல் அக்டோபர் மாதம் வரை அரசு துறைகளில் உள்ள பல்வேறு பதவிகளுக்கான
அறிவிப்பு எப்போது வெளியிடப்படும் என்ற விவரங்கள் இடம்பெற்றுள்ளன.
அதன்படி குரூப் 1 தேர்வு அறிவிப்பு ஜனவரி மாதத்திலும், ஒருங்கிணைக்கப்பட்ட
குரூப் 2 தேர்வு அறிவிப்பு மே மாதத்திலும் வெளியாக உள்ளது. இதேபோல், குரூப்
4 பதவிகளுக்கான அறி விப்பு செப்டம்பர் மாதம் வெளி யாக உள்ளது.
மேலும், குரூப் 3, குரூப் 6, குரூப் 7 மற்றும் குரூப் 8 பதவிகளில் அடங்கிய
பணியிடங்களுக்கான அறிவிப்புகளின் தகவல்களும் இடம்பெற்றுள்ளன. இதுதவிர
பொறியாளர் பணிகள் உட்பட 23 பிரிவுகளுக்கான தேர்வு விவ ரங்களும்
தெரிவிக்கப்பட்டுள்ளன.
கூடுதல் விவரங்களை மேற்கண்ட டிஎன்பிஎஸ்சி இணையதளத்தில் தேர்வர்கள் தெரிந்து கொள்ளலாம் என்று துறை அதிகாரிகள் தெரிவித் தனர்.