இந்தியாவில் உள்ள பாகிஸ்தானியர்கள் வெளியேற வரும் 29ம் தேதி வரை ஒன்றிய அரசு கெடு விதித்துள்ளது. ஒன்றிய அரசின் உத்தரவை அடுத்து தமிழ்நாட்டில் உள்ள பாகிஸ்தானியர்களை கணக்கெடுக்கும் பணி நடைபெற்றது. குடியுரிமை அதிகாரிகள் தகவலின் படி தமிழ்நாட்டில் பாகிஸ்தானியர்கள் 200 பேர் வரை இருக்கலாம் என தகவல் வெளியாகி உள்ளது. பாகிஸ்தானியர்கள் 200 பேரையும் கண்டறிந்து நாட்டை விட்டு வெளியேறுமாறு போலீசார் அறிவுறுத்தி வருவதாக தகவல் தெரிவித்துள்ளனர்.