Friday, March 14, 2025
Google search engine
HomeLifestyleEducation & Informationஅரசுப் பள்ளி மாணவர்களின் திறனை கண்டறிய ‘நாட்டமறி தேர்வு’ பள்ளிக்கல்வித் துறை புதிய முயற்சி 

அரசுப் பள்ளி மாணவர்களின் திறனை கண்டறிய ‘நாட்டமறி தேர்வு’ பள்ளிக்கல்வித் துறை புதிய முயற்சி 



அரசுப் பள்ளி மாணவர்களின் வேலைவாய்ப்புக்கும் உயர் கல்வியை தேர்வு செய்யவும் வழி காட்டும் வகையில் பிரத்யேக திறனறி தேர்வு நடத்த பள்ளிக் கல்வித் துறை முடிவு செய்துள்ளது.

நம்நாட்டில் பிளஸ் 2 தேர்ச்சி பெற்று பள்ளிக்கல்வியை முடிக் கும் மாணவர்கள் தங்களுக்கு ஏற்ற உயர்கல்வி படிப்புகளை தேர்வு செய்வதில் சிரமங்களைச் சந்திக்கின்றனர். இதனால் விருப்ப மற்ற துறைகளில் படிப்பதால் மாணவர்களின் எதிர்காலம் கேள்வி யாகிறது. இதற்கு பள்ளிகளிலேயே மாணவர்களின் திறன்களை கண்டறிய கல்வியாளர்கள் வலி யுறுத்தி
வந்தனர்.

இந்நிலையில் மத்திய மனித வளமேம்பாட்டுத் துறை, தேசியக் கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி குழுமம் (என்சிஇ ஆர்டி) உதவியுடன் ‘டமன்னா’ என்ற திறனறித் தேர்வு முறை வடிவமைத்துள்ளது. அதன்படி, வாய்மொழித்திறன், மொழித்திறன் என மொத்தம் 7 தலைப்புகளில் கணினி வழியில் இந்தத் தேர்வு நடைபெறும். சிபிஎஸ்இ பள்ளிகளில் சமீபத்தில் அறி முகம்
செய்யப்பட்டு நல்ல வர வேற்பு கிடைத்துள்ளது. அதைத் தொடர்ந்து மற்ற மாநிலங்களிலும் இத்தேர்வு முறையை பின்பற்ற மத்திய அரசு அறிவுறுத்தியது.

அதன்படி, தமிழகத்தில் திறனறி தேர்வு நடத்துவது குறித்து பள்ளிக் கல்வித் துறை அதிகாரிகள் கூறிய தாவது: பள்ளிகள் அளவில் ‘நாட்ட மறித் தேர்வு’ நடத்தப்பட உள்ளது. என்சிஇஆர்டி வடிவமைத்த டமன்னா தேர்வு முறையில் நம்கல்வி
முறைக்கேற்ப சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. அதன்படி, பாடத்திட்டத்துக்கு அப்பாற்பட்டு மொழி, கணிதம், அறிவியல், பொது அறிவு உட்பட பல்வேறு பிரிவுகளின்கீழ் ஒரு மணி நேரம் தேர்வு நடைபெறும்.



இந்தத் தேர்வை அரசுப் பள்ளிகளில் 9, 10-ம் வகுப்புகள் படிக்கும் 8 லட்சத்து 45,218 பேர் கணினி வழியில் எழுத உள்ளனர். தமிழ், ஆங்கிலத்தில் தேர்வு நடைபெறும். இதற்கான வழிகாட்டு கையேட்டில் மதிப் பெண்கள் வழங்குவது குறித்து வழிகாட்டுதல்கள் உள்ளன. இந்தத் தேர்வில் பெறும் மதிப் பெண்களைக் கொண்டு மாண வர்களின் தனித் திறமைகளை எளிதாக அறியலாம். இதன்மூலம் உயர்கல்வியை சிரமமின்றி தேர்வு செய்து படிக்கலாம்.

இதுதவிர மாணவர்களுக்கு எந்த துறையில் ஆர்வமுள்ளது என்பதை கண்டறிந்து அதில் சிறந்து விளங்கும் கல்வியாளர்கள், நிபுணர்கள் மூலம் அவர்களுக்கு வழிகாட்டுதல்கள் வழங்கப்படும். இந்தத் தேர்வை நடத்துவதற்கு மாவட்டம் மற்றும் வட்டார அளவில் குழுக்கள் அமைக்கப்பட உள்ளன. கணினி வசதியுள்ள பள்ளிகளை கண்டறியும் பணி கள்
தொடங்கியுள்ளன. அனைத்து பணிகளையும் முடித்து ஜனவரியில் தேர்வு நடத்தப்படும்.

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments