ஹத்ராஸ் சென்று பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்துக்கு ஆறுதல் கூறுவதை யாராலும் தடுக்க முடியாது: ராகுல்காந்தி
டெல்லி: ஹத்ராஸ் சென்று பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்துக்கு ஆறுதல் கூறுவதை யாராலும் தடுக்க முடியாது என்று ராகுல்காந்தி தெரிவித்துள்ளார். ராகுல் காந்தி தலைமையில் எம்.பி.க்கள் அடங்கிய காங்கிரஸ் கட்சி குழுவினர் இன்று மதியம் ஹத்ராஸ் பயணம் மேற்கொள்கின்றனர். ஏற்கனவே உத்திரபிரதேச போலீசாரால் தடுத்து நிறுத்தப்பட்டு தள்ளி விடப்பட்ட நிலையில் மீண்டும் ராகுல் காந்தி செல்கிறார்.