இந்திய கடற்பரப்பில் ஏவுகணை சோதனையை இந்தியா மேற்கொண்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. பஹல்காம் தாக்குதலை தொடர்ந்து வாகா எல்லை மூடல், பாகிஸ்தானியர்கள் வெளியேற்றம், சிந்து நதி நீர் ஒப்பந்தம் ரத்து என அடுத்தடுத்து இந்தியா பதிலடி கொடுத்தது. கராச்சி கடற்பகுதியில் பாக்., ஏவுகணை சோதனை மேற்கொண்ட நிலையில், இந்தியாவும் பதிலடியாக கடல்சார் இலக்குகளை துல்லியமாக குறிவைத்து தாக்கும் ஏவுகணை சோதனையை செய்துள்ளது.