சென்னை: வெப்பச்சலனம், வளிமண்டல மேலடுக்கு சுழற்ச்சியால் 5 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, சேலம், பெரம்பலூர், கடலூரில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது எனவும் கூறியுள்ளது. அடுத்த 48 மணி நேரத்தில் வேலூர், திருவண்ணாமலை, திருப்பத்தூர், ராணிப்பேட்டை, தருமபுரியில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு உள்ளது எனவும் கூறியுள்ளது.