Saturday, August 30, 2025
Google search engine
HomeNewsகிருஷ்ணகிரியில் திமுகவினர் ஆர்ப்பாட்டம்

கிருஷ்ணகிரியில் திமுகவினர் ஆர்ப்பாட்டம்

சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தைப் பிரித்து மத்திய அரசின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவர முயற்சிக்கும் மத்திய அரசை கண்டித்தும், அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தரை கண்டித்தும் கிருஷ்ணகிரியை அடுத்த கந்திகுப்பத்தில் திமுக இளைஞர் அணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

கிருஷ்ணகிரி திமுக கிழக்கு மாவட்டப் பொறுப்பாளர் டி. செங்குட்டுவன் எம்எல்ஏ தலைமையில் நடைப்பெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் முருகன் எம்எல்ஏ, பருகூர் ஒன்றியச் செயலாளர் கோவிந்தராசன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றோர் மத்திய அரசைக் கண்டித்தும், அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தரை பதவி விலகக் கோரியும் முழக்கங்களை எழுப்பினர்.

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

- Advertisment -
Google search engine

Cinima World