Friday, May 9, 2025
Google search engine
HomeNewsஅரசுப்பள்ளி மாணவர்களுக்கு 7.5% உள்ஒதுக்கீடு கோரி ஆளுநர் மாளிகை முன் தி.மு.க.ஆர்ப்பாட்டம்

அரசுப்பள்ளி மாணவர்களுக்கு 7.5% உள்ஒதுக்கீடு கோரி ஆளுநர் மாளிகை முன் தி.மு.க.ஆர்ப்பாட்டம்

சென்னை: அரசுப்பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீதம் உள்ஒதுக்கீடு கோரி ஆளுநர் மாளிகை முன் தி.மு.க. ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளது. தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின் தலைமையில் ஆளுநர் மாளிகை முன் ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது. தி.மு.க. முதன்மை செயலாளர் டி.ஆர்.பாலு, அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி நிர்வாகிகள் உள்ளிட்டோர் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றுள்ளனர்.

7.5% உள் இடஒதுக்கீட்டு மசோதாவுக்கு 5 வாரங்களாக ஒப்புதல் அளிக்காமல் ஆளுநர் இழுத்தடித்து வருகிறார் என முக ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார். 40 நாட்களாகியும் 7.5% உள் இடஒதுக்கீடு மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்கவில்லை. நீட் தேர்வு என்பது பலிபீடமாக மாறி இருக்கிறது. நீட் தேர்வில் தொடர்ந்து குழப்பமான நிலை நீடித்து வருகிறது. கருணாநிதி, ஜெயலலிதா ஆட்சியில் இருக்கும் வரை நீட் தேர்வு தமிழகத்தில் நுழைய முடியவில்லை. நீட் தேர்வு ஒருபோதும் இருக்கக்கூடாது என்பது திமுகவின் கொள்கை என குறிப்பிட்டுள்ளார்.

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

- Advertisment -
Google search engine

Cinima World