Friday, June 19, 2026
HomeNewsபாவேந்தர் பாரதிதாசன் பிறந்தநாளை முன்னிட்டு ஏப்.29 முதல் மே 5 வரை தமிழ் வார விழா...

பாவேந்தர் பாரதிதாசன் பிறந்தநாளை முன்னிட்டு ஏப்.29 முதல் மே 5 வரை தமிழ் வார விழா கொண்டாடப்படும்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

பாவேந்தர் பாரதிதாசன் பிறந்தநாளை முன்னிட்டு ஏப்ரல்.29 முதல் மே 5 வரை தமிழ் வார விழா கொண்டாடப்படும் என 110 விதியின் கீழ் சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். பாரதிதாசனை போற்றும் வகையில் அறிவிப்பு வெளியிடுகிறேன்.கொள்கை பாதை வகுத்து தந்தவர் பாரதிதாசன். பாவேந்தரின் படைப்புகளை நாட்டுடைமை ஆக்கியவர் கலைஞர். இன்றும் தனது எழுத்து வரிகளால் பாரதிதாசன் வாழ்ந்து கொண்டிருக்கிறார். மாநிலம் முழுவதும் கலைநிகழ்ச்சிகள் நடத்தப்படும். தமிழ் மொழியின் பங்களிப்பு குறித்து கவியரங்கம், கருத்தரங்கம், கவிதை போட்டிகள் நடத்தப்படும்.பள்ளிகளில் பேச்சு, கட்டுரை, கவிதை போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்படும் என தெரிவித்தார்.

RELATED ARTICLES

Most Popular

Cinima World