சென்னை: மிசா சட்டத்தில் கைதாகி சிறையில் இருந்தேன் என நானே சொல்வது எனக்கே வெட்கமாக இருக்கிறது என திமுக தலைவர் மு க ஸ்டாலின் தெரிவித்தார். திமுக எம்எல்ஏ பெரியண்ணன் அரசுவின் இல்லத் திருமண விழாவில் திமுக தலைவர் ஸ்டாலின், காங்கிரஸ் எம்பி திருநாவுக்கரசு, பாஜக மாநில துணைத் தலைவர் பிடி அரசகுமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இந்த விழாவில் திமுக தலைவர் முக ஸ்டாலின் கூறுகையில் உள்ளாட்சி தேர்தல் நடத்த வேண்டும் என்பதுதான் திமுகவின் எண்ணம். ஆனால் புதிதாக உருவான மாவட்டங்களுக்கான வரையறை இல்லாமல் தேர்தல் நடத்த் கூடாது என்பதுதான் எங்கள் எண்ணம்.
அரசு அதிமுகதான் உள்ளாட்சித் தேர்தலை நிறுத்த முயற்சிக்கிறது. மக்களுக்கு பயனுள்ள திட்டங்கள் எதுவாக இருந்தாலும் மனப்பூர்வமாக வரவேற்கிறோம். கருணாநிதி ஆட்சியில் ரேஷன் அட்டை வைத்திருக்கும் அனைவருக்கும் டிவி கொடுத்தோம்.
அது போல் பொங்கல் பரிசு திட்டத்தை அனைவருக்கும் கொடுக்க வேண்டும்.
அரிசி அட்டைக்கு மட்டும் என அரசு பாரபட்சம் பார்க்கக் கூடாது. அரசியலுக்கு
அப்பாற்பட்டு துணிச்சலமான உண்மைகளை பாஜகவின் அரசகுமார் வெளிப்படையாக
கூறிவிட்டார்.
மிசா சட்டத்தில் கைதாகி சிறையில் இருந்தேன் என நானே சொல்வது எனக்கே
வெட்கமாக இருக்கிறது. நானும் ஸ்டாலின் 1989-இல் எம்எல்ஏவாக ஆனோம். இன்று
நான் முதல்வராகிவிட்டேன் என எடப்பாடி கூறி வருகிறார். ஊர்ந்து சென்று
யாருடைய காலையும் பிடித்து கொண்டு முதல்வர் ஆக வேண்டிய அவசியம் எனக்கில்லை.
நான் கருணாநிதியின் மகன், எனக்கு தன்மானம் இருக்கிறது என்றார் ஸ்டாலின். இந்த விழாவில் பாஜகவின் துணை தலைவர் அரசகுமார் கலந்து கொண்டார். அவர் கூறுகையில் எம்ஜிஆருக்கு அடுத்து நான் ரசிக்கும் தலைவர் ஸ்டாலின். ஜனநாயக முறையில் முதல்வராக ஸ்டாலின் காத்திருக்கிறார். காலம் கனியும் காரியங்கள் தானாக நடக்கும். ஸ்டாலின் அரியணை ஏறுவார். நாம் அதை பார்ப்போம் என தெரிவித்தார்.