நேற்று கத்திகள் மற்றும் போலி வெடி
குண்டு ஒன்றுடன் மக்களை அச்சுறுத்தி, இரண்டு பேரைக் கொன்று 12 பேரை
காயப்படுத்திய தீவிரவாதியை பொலிசார் வரும் முன் பொதுமக்களே
மடக்கிப்பிடிக்கும் காட்சி ஒன்று வெளியாகியுள்ளது.
நேற்று மதியம் 2 மணியளவில், பாலத்தின் வட பகுதியில் தாக்குதல் நடத்திவிட்டு, நடுப்பகுதியை நோக்கி ஓடியிருக்கிறான்.
அப்போது
பொதுமக்கள் சிலர் அவனை மடக்கிப்பிடிக்க முயன்றிருக்கிறார்கள்.
வெளியாகியுள்ள வீடியோ ஒன்றில், தீயணைக்கும் கருவி ஒன்றிலிருந்து
பீய்ச்சியடிக்கும் தண்ணீரால் ஒருவர் அந்த தீவிரவாதியை நிலைகுலையச் செய்ய,
மற்றொருவர் கையிலிருந்த கொம்பு ஒன்றால் அவனைத் தாக்கியுள்ளார்.
அவர்
கையிலிருந்தது திமிங்கலம் ஒன்றின் கொம்பு என்று கூறப்படுகிறது. பொதுமக்கள்
அந்த தீவிரவதியை மடக்கிப்படித்த பின்னரே பொலிசார் வந்து அவனை
சுட்டுக்கொன்றுள்ளனர்.
சுட்டுக்கொல்லப்பட்ட தீவிரவாதியின் பெயர்
உஸ்மான் கான் (28). ஏற்கனவே 2012ஆம் ஆண்டு, தீவிரவாத குற்றச்செயல்களுக்காக
கைது செய்யப்பட்டு எட்டு ஆண்டுகள் சிறையில் அடைக்கப்பட்டிருந்தான் உஸ்மான்
கான். 2018ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் அவன் விடுவிக்கப்பட்டான்.
இந்நிலையில்தான், நேற்று பாலத்தை வெடிக்கச் செய்வதாக மிரட்டிய கான் பொலிசாரால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளான் என்பது குறிப்பிடத்தக்கது.
