சென்னை கிண்டி சிறுவர் பூங்காவில் குழந்தைகளுக்கு கட்டணம் ரூ.5-லிருந்து ரூ.20-ஆகவும், பெரியவர்களுக்கு ரூ.20-லிருந்து ரூ.50-ஆகவும் உயர்வு
சென்னை: சென்னை கிண்டியில் சிறுவர் பூங்காவில் குழந்தைகளுக்கான கட்டணம் ரூ.5-லிருந்து ரூ.20 ஆக உயர்ந்துள்ளது. பெரியவர்களுக்கு கட்டணம் ரூ.20 லிருந்து ரூ.50 ஆக உயர்ந்துள்ளது. சிறுவர்களை கவரும் வகையில் வனவிலங்குகளின் அனிமேஷன் காட்சிகள் கிண்டி பூங்காவில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. புலி, டால்ஃபீன், கங்காரு, அனகோண்டா, டைனோசர் போன்ற விலங்குகளின் காட்சி திரையில் பார்க்க முடியும். நாட்டிலேயே முதல்முறையாக இதுபோன்ற விலங்குகளின் காட்சிப்படம் நவீனமுறையில் அறிமுகப்படுத்தப்படுகிறது.