தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம்
செய்தி வெளியீடு
தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையத்தால் தமிழ்நாடு வேலைவாய்ப்பு மற்றும்
பயிற்சி சார்நிலை பணிகளுக்கான – உதவி பயிற்சி அலுவலர் (சுருக்கெழுத்து –
ஆங்கிலம்) மற்றும் உதவி பயிற்சி அலுவலர் (செயலக நடைமுறை) பதவிகளின் 13
காலிப்பணியிடங்களுக்கான அறிவிக்கை 19.04.2019 அன்று வெளியிடப்பட்டு
22.06.2019 அன்று 349 விண்ணப்பதாரர்களுக்கு எழுத்துத் தேர்வு
நடத்தப்பட்டது.
உதவி பயிற்சி அலுவலர் (சுருக்கெழுத்து – ஆங்கிலம்) பதவியானது சுமார் 27
ஆண்டுகளுக்குப் பிறகு,, தேர்வாணையத்தால் நடத்தப்பட்ட தேர்வாகும் மற்றும்
உதவி பயிற்சி அலுவலர் (செயலக நடைமுறை) பதவியானது தேர்வாணையத்தால்
முதன்முறையாக நடத்தப்பட்ட தேர்வாகும். இத்தேர்வுகளுக்கான தேர்வு முடிவுகள்
19.12.2019 அன்று வெளியிடப்பட்டுள்ளன. இதுபோன்று, அரிய பதவிகளுக்கு
குறைந்த எண்ணிக்கையிலான காலிப் பணியிடங்கள் இருப்பினும் முக்கியத்
தேர்வுகளுக்குக் கொடுக்கப்படும் அதே முக்கியத்துவம் இதுபோன்ற
தேர்வுகளுக்கும் அளிக்கப்பட்டு, தேர்வு முடிவுகளை விரைவில் வெளியிட
தேர்வாணையம் நடவடிக்கை எடுத்து வருகிறது.
எழுத்துத் தேர்வில் விண்ணப்பதாரர்கள் பெற்ற மதிப்பெண்கள், இடஒதுக்கீட்டு
விதி மற்றும் இப்பதவிகளுக்கான அறிவிக்கையில் வெளியிடப்பட்ட பிற விதிகளின்
அடிப்படையில் மூலச்சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் நேர்முகத்தேர்வுக்கு
தற்காலிமாகத் தெரிவு செய்யப்பட்டுள்ள 38 விண்ணப்பதார்ரர்களின் பதிவெண்கள்
கொண்ட பட்டியல் தேர்வாணைய இணையதளமான www.tnpsc.gov.in ல்
வெளியிடப்பட்டுள்ளது. இவர்களுக்கான மூலச் சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும்
நேர்முகத் தேர்வு ஆகியவை 31.01.2020 அன்று நடைபெறவுள்ளது. இதற்கான
குறிப்பாணை வழக்கம்போல் தேர்வாணையத்தின் இணையதளத்தில் வெளியிடப்பட்டு,
தெரிவாளர்களுக்கு மின்னஞ்சல் மற்றும் குறுஞ்செய்தி மூலம் தகவல்
தெரிவிக்கப்படும்.
மேலும், 10.08.2019 மு.ப & பி.ப மற்றும் 25.08.2019 மு.ப & பி.ப
(உதகையில் மட்டும்) ஆகிய தேதிகளில் நடத்தப்பட்ட ஒருங்கிணைந்த பொறியியல்
பணிகளில் அடங்கிய பதவிகளுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு / நேர்முகத்
தேர்விற்கு தெரிவு செய்யப்பட்டுள்ள 1,487 விண்ணப்பதாரர்களின் பதிவெண்கள்
கொண்ட பட்டியல் தேர்வாணைய இணையதளமான www.tnpsc.gov.in ல்
வெளியிடப்பட்டுள்ளது.
மேற்படி நேர்முகத் தேர்வு 03.01.2020 முதல் 28.01.2020 வரை [05.01.2020,
11.01.2020 முதல் 19.01.2020 வரை மற்றும் 26.01.2020 இத்தேதிகளை தவிர்த்து]
நடைபெறவுள்ளது. இதற்கான குறிப்பாணை வழக்கம்போல் தேர்வாணையத்தின்
இணையதளத்தில் வெளியிடப்பட்டு, தெரிவாளர்களுக்கு மின்னஞ்சல் மற்றும்
குறுஞ்செய்தி மூலம் தகவல் தெரிவிக்கப்படும். அஞ்சல் / கடிதம் வழியாக
தகவல்கள் ஏதும் அனுப்பப்பட மாட்டாது. இரா. சுதன், இ.ஆ.ப., தேர்வுக்
கட்டுப்பாட்டு அலுவலர்.