Thursday, March 13, 2025
Google search engine
HomeNewsDravidian Stock“திராவிடம்” என்ற சொல்லின் “முழுமையான சரியான” அர்த்தம்

“திராவிடம்” என்ற சொல்லின் “முழுமையான சரியான” அர்த்தம்

கேள்வி: “திராவிடம்” என்ற சொல்லின் “முழுமையான சரியான” அர்த்தம் தெரிந்தால் பதிவிட முடியுமா?

என்ற கேள்விக்கு நான் தந்த பதிலே இக்கேள்விக்கும் பொருத்தமாக இருப்பதால், இங்கு மீள்பதிவு செய்கிறேன்.

சுருக்கமான விடை: “திராவிடம்” என்று ஆரியர்கள் உருவாக்கிய சொல் “தமிழம்” என்ற தமிழ்ச் சொல்லின் ஆரியத் திரிபு. “தமிழம் என்ற சொல்லின் பொருள், தமிழ்க்குலம், தமிழ் மொழி, தமிழ்நாடு என்ற மூன்றையும் ஒன்றாகக் குறிக்கும்.

“திராவிடம்” என்பதன் வரலாறு முழுவதும் அறிய விரும்புவோர் முழுக்கட்டுரையையும் படிக்கவும்.

—————-

“திராவிடம்” என்ற சொல்லின் “முழுமையான சரியான” பொருள் வேண்டும் என்பதை இப்படிப் பிரித்துக் கொள்கிறேன்:

“திராவிடம்” என்ற சொல் எந்த மொழியிலிருந்து உருவான சொல்? எவ்வாறு உருவானது? எப்பயன்பாடுகளை நோக்கி?தமிழர்களுக்கும் திராவிடர்களுக்கும் என்ன உறவு?திராவிடர்களுக்கும் ஆரியர்களுக்கும் என்ன உறவு?”திராவிடம்” என்ற சொல் இனத்தைக் குறிக்கின்ற சொல்லா? இந்தியர்களில் திராவிடர்கள் யார்?தற்போது “திராவிடம்” என்பது எப்பொருளில் வழங்குகிறது?

கேள்வி-5-க்கான விடை எளிதானது:

‘திராவிடம்’ என்ற சொல், தற்காலத் தமிழக அரசியல் தளத்தில்

தமிழ்மொழியையும், தமிழ்மொழி Orthography-யோடு, சமஸ்கிருதத்தையும் கலந்து உருவாக்கிய கன்னடம், தெலுங்கு, மலையாளம், துளு உள்ளிட்ட அனைத்துத் தென்மொழிகளையும் ஒருங்கே குறிக்கும் மொழித்தொகுதியாகவும்,ஆரிய நால்வருணச்சாதி அடிப்படையிலான சநாதனதருமக் கருத்தியலுக்கு எதிரானதாக எழுந்த எதிர்வினைக் ‘கருத்தியல்’ ஆகவும்

உள்ளது.

நீங்கள் முழுமையான பதில் விரும்புவதால் மொழி எப்படி உருவானது – ஓசைக்கும் மொழிக்கும் இடையேயான உறவு, வேறுபாடுகள் – குறித்து அறிதல் அவசியம்.

முடிந்தவரை சுருக்கமாகச் சொல்கிறேன்.

பகுதி -1: மொழியின் அடிப்படைகள்!

ஓசை என்பது

காற்றின் இயக்கத்தில் எழுவதும், கடலலைகள் ஆர்ப்பரித்து எழுவதும், பொருட்கள் ஒன்றுடன் ஒன்று உராய்வதால் எழுவதும் ஆகும்.

ஓசைகளுக்கு இயல்பாகப் பொருள் ஒன்றும் இல்லை; மக்களின் ஒலித்தொகுதியின் உறுப்புகளுக்குப் பொருள் உண்டு.

காற்றின் இயக்கம் வெற்று வெளியில் இருக்கும்போது வெறும் ஓசை மட்டுமே!

காற்று இயக்கம் உயிர்களின் வாய்வழியே இயங்கும்போது மொழியாகும்.

மொழி என்பது

ஒரு நாட்டு மக்கள் தமக்குள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளும் ஒலித் தொகுதியைக் குறிக்கும்.மக்களின் ஒலித்தொகுதியில், சொற்களும், சொற்றொடர்களும் இருக்கும்.

மனிதன் தவிர்ந்த ஏனைய உயிர்களின் மொழி, ஓரறிவு முதல் ஐந்தறிவு வரை-யுள்ள தாவரம், பறவை, விலங்கு என்பனவற்றில் ஒவ்வொரு இனத்துக்கும் வேறுபடும். அவை உருவாக்கும் ஒலி ஓசைகளுக்கான பொருள், அவ்வவ் இனத்தில் உள்ள உயிரிகளுக்கு விளங்கும்.

பசி, தாகம், இணைவிழைச்சு, உணவு தேடல், குடும்ப வாழ்வு, இன வாழ்வு, மூளை வளர்ச்சி, குரல்வளை அமைப்பு போன்றவற்றிற்கு ஏற்ப அவைகளின் ஒலித்தொகுதிகள் வளர்ச்சியடைந்திருக்கும்.

ஒலிக்கு இயற்கையில் பொருள் உணர்த்தும் தன்மை இல்லை. (அப்படி இருந்திருந்தால், உலகமெங்கும் ஒரே மொழியாக இருந்திருக்கும்! யாருக்கும் மொழியைக் கற்காமலேயே பொருள் விளங்கும்!)

ஒலியைப் பொருள் உணர்த்தும் அடையாளமாகக் கொள்வதே மொழி!

உலகில் ஏன் பல மொழிகள் உருவாயின?

ஒவ்வொரு பொருளுக்கும் தனித்த ஒலி அடையாளம் தந்து, பொருட்கள் அனைத்துக்கும் தரப்பட்ட ஒலித்தொகுதியே ஒரு நாட்டு மக்களின் மொழி ஆகும்.மக்கள் உருவாக்கும் “பொருளுக்கான ஒலி அடையாளங்கள்” நாட்டுக்கு நாடு வேறுபடுவதால், நாட்டுக்கு நாடு மொழிகளும் வேறுபடுகின்றன. எனவே, ஒரு நாட்டாரின் மொழியை நாம் கற்றுக்கொண்டால் மட்டுமே பேச முடியும்.நாகரிக வளர்ச்சிக்கு ஏற்பவே மொழி வளர்ச்சியும் இருக்கும்.அந்தமான் காடுகளில் வாழும் ஜாரவா இன மக்களைப்போல, மிகச்சில ஒலிகளால், மிகச்சில கருத்துக்களைத் தெரிவித்துக்கொண்டு, தமக்கென மொழியில்லாத நாகரிகமடையாத மக்களும், இன்று உலகின் பல்வேறு காடுகளில் வாழ்ந்துவருகின்றனர்.எனவே, மனிதன் ஒரு காலத்தில் மொழியில்லாமல் இருந்தான் என்பதும், மொழி வளர்ச்சியும், நாட்டுக்கு நாடு, வெவ்வேறு காலங்களில் ஏற்பட்டவை என்பதும் வெளிப்படை.

உலக மொழிகளின் வளர்ச்சிகள் பல கால இடைவெளியைக் கொண்டிருப்பது ஏன்?

நாகரிகத்தின் உச்சியை அடைந்த இக்காலத்திலும், எண்ணும், எழுத்தும் இல்லாத மிகச்சிறிய ஒலித் தொகுதியைக் கொண்ட மொழியில்லாமல், அந்தமான் காடுகளில் வாழும் ஜாரவா இன மக்களைப் போல,மொழிகளின் வளர்ச்சி, ஆயிரக்கணக்கான ஆண்டுகள் முன்பே நாகரிகம் அடைந்த தமிழர்களைப் போலுள்ள இனங்களில் வேகமாகவும்,தமிழர்களுக்கு ஊழிக்காலங்கள் பின்னால் வந்தும், எண்ணும் எழுத்தும் இல்லாமல் நாடோடிகளாக வாழ்ந்த ஆரியர்களைப் போலுள்ள இனங்களில் குறைவாகவும் மொழி-வளர்ச்சி இருந்தது இயல்பே.ஐரோப்பிய-ஆரிய இனத்தினரின் மூத்த மொழிகளான கிரேக்கம், இலத்தீனம், ஜெர்மானிய, பிரெஞ்சு, மொழிகளை விடவும், இந்தியாவில் குடி புகுந்த ஆரிய இனத்தின் வேதமொழியும், பின்னர் அவர்கள் திருந்தச்செய்த சம்ஸ்கிருத மொழியும், பன்மடங்கு மேம்பட்டதற்குக் காரணம் தமிழ் மொழி அமைப்பை மையமாகக் கொண்ட இந்திய பிராகிருத மொழிகளும், தமிழ் மொழியுமே.

இவ்வுண்மை இக்கட்டுரை இறுதியில் இன்னும் தெளிவாகும்.

பகுதி-2: இயற்கை மொழிகளும் திரிமொழிகளும்!

முதன்முதலில் உயிர்களும், மனிதனும் தோன்றிய கண்டம்!

உலகிலுள்ள மக்களெல்லாம் ஓரிடத்தில் தோன்றி, உலகெங்கும் பரவினர் என்பது அறிவியலாளர் கண்ட முடிவு! அவ்வாறு மாந்தன் தோன்றிய இடம் குமரிக்கண்டம் (லெமுரியா) என்று மாந்தவியல் அறிஞர்கள் சொல்கின்றனர்.

மனிதர்கள் உலகெங்கும் புலம்பெயரக் காரணம்!

மனிதர்கள் முதலில் தோன்றிய இடத்தில் சில ஆயிரம் ஆண்டுகள் மொழியில்லாமல் வாழ்ந்திருக்கிறார்கள்.

மக்கள் தொகைப் பெருக்கம் காரணமாக, உணவு, இருப்பிடம் ஆகியன தேடி,

மொழி உருவாகாத நிலையிலேயே சில குழுக்கள் வேறு வேறு இடங்களுக்குப் புலம் பெயர்ந்தனர்.தொடக்க மொழி உருவான நிலையில் சில குழுக்கள் வேறு வேறு இடங்களுக்குப் புலம் பெயர்ந்தனர்.

மொழிஉருவாகும்முன் புலம்பெயர்ந்தவர்கள் உருவாக்கியது இயற்கைமொழிகள் (Natural Languages)!

மொழியில்லாமல் புலம் பெயர்ந்தவர்கள், சென்ற இடங்களில், அவர்களால் இயன்றவாறும், அவர்களுக்கு ஏற்றவாறும், இயற்கை மொழிகளை உருவாக்கிகொண்டனர். சீனம், அரபி, கிரேக்கம், இலத்தீன் போன்ற மொழிகள் இவ்வாறு உருவானவை.

இயற்கைமொழி பேசியவர்கள் புலம்பெயர்ந்தபின் உருவானவை திரிமொழிகள்(Derivative Languages)

மொழி உருவானபின் பிரிந்து சென்றவர்கள், அவர்கள் சென்ற இடத்தின் தட்ப வெப்ப நிலைக்கேற்ப, புதுச் சொற்களை உருவாக்கியும், பழைய சொற்களைத் திரித்தும் புதிய திரிமொழிகளை உருவாக்கிக் கொண்டனர்.

கிரேக்கம், இலத்தீன் போன்ற இயற்கை மூல மொழிகளிலிருந்து திரிந்தவை ஆங்கிலம், பிரெஞ்சு, இந்திய வேதமொழி ஆகியன.

தமிழ் மொழியிலிருந்து திரிந்தவை இந்திய பிராகிருத, திராவிட மொழிகள்.

சீன மொழிஇலிருந்து திரிந்தவை சீன-திபெத்திய மொழிக்குடும்பங்கள், பர்மிய, திபெத்திய மொழிகள் (Sino-Tibetan language family, Burmese, Tibetan) போன்றவை சீன மொழியிலிருந்து உருவானவை.

தமிழ் தோன்றிய ‘இலெமூரியா’ என்னும் குமரிக்கண்டம்

குமரிமுனைக்குத் தெற்கே, இந்தியா, ஆஸ்திரேலியா, ஆப்பிரிக்கா என்றார் மூன்று கண்டங்களையும் இணைத்துக்கொண்டு பல்லாயிரம் ஆண்டுகளுக்குமுன் விளங்கிய ஒரு பெருநிலப்பரப்பு ‘கிழக்கே இன்றைய ஆஸ்திரேலியா முதல் மேற்கே ஆப்பிரிக்கா முடிய’ நீளப் பரந்து கிடந்தது.

இப்பெரும் நிலப்பரப்பை ஆய்ந்த மேலை அறிஞர் எக்கெலும் (Hegel) காட் எலியட்டும் (William Scott-Elliot-1904) இப்பகுதிக்கு இலெமூரியா (Lemuria) என்று பெயரிட்டனர். இங்கு வாழ்ந்த இலெமூர் (Lemur) என்றமனித இனத்திற்கு நெருங்கிய தோற்றம் கொண்ட குரங்கினத்தின் பெயரால் ‘இலெமூரியா’ என்று பெயரிட்டனர்.

12-ம் நூற்றாண்டைச் சேர்ந்த சிலப்பதிகார உரையாசிரியர் அடியார்க்குநல்லார் லெமூரியா என்னும் பகுதியை ‘குமரி நாடு’ என்று குறித்துள்ளார். இப்பெரும் பகுதியில், இன்றைய தமிழகத்தை ஒட்டித் தெற்கில் குமரி என்றொரு ஆறும், அதற்கு நெடுந்தெற்கில் பஃறுளியாறும் ஓடின. இவ்விரண்டிற்கும் இடையே குமரிமலை என்றொரு மலையும் இருந்தது என்று, தொல்தமிழ் இலக்கியங்கள் குறிக்கின்றன.

இவ்விரண்டு ஆறுகளின் இடைப்பட்ட பெருநிலப் பகுதியில் ஏழ்தெங்க நாடு, ஏழ் மருத நாடு, ஏழ் முன்பாலை நாடு, ஏழ் பின்பாலை நாடு, ஏழ் குன்ற நாடு, ஏழ் குணகாரை நாடு, ஏழ் குறும்பனை நாடு என ஏழுபெருநாடுகள் இருந்தன. ஒரு பெருநாட்டில், ஏழு நாடுகளாக, மொத்தம், நாற்பத்திஒன்பது நாடுகள் இருந்தன.

குமரி, கொல்லம் முதலிய பல மலைகள், காடுகள், பல ஆறுகள் கொண்ட குன்றம் , முல்லை, மருதநாடு, இருபாலை எனத் தமிழ்நிலப் பாகுபாட்டுப் பெயர்களையும் கொண்ட இந்நிலத்தின் நீட்சி எழுநூற்றுக் காவதம் (காவதம்-பத்து கல்) என்கிறது அடியார்க்கு நல்லாரின் உரை. அஃதாவது ஏறத்தாழ 11,265 கிலோ மீட்டர் ஆகும்.

குமரி ஆறு, குமரி மலை ஆகியன கொண்ட 49 நாடுகளைக் கொண்ட பெருநிலமாகையால் குமரிக் கண்டம் எனப்படுகிறது.

குமரிக்கண்டம் மூழ்கியபின் வாழ்ந்த மக்களும் மொழிகளும்!

குமரிக்கண்டம் பல்வேறு காலங்களில் தோன்றிய, பல கடற்கோள்களால் முழுகிய பின்னர், இந்தியா முழுவதும் தெற்கிலிருந்து வடக்கு நோக்கி, பல்வேறு கால கட்டங்களில் மக்கள் புலம் பெயர்ந்தனர்.

குமரிக்கண்டத்திலேயே தொடர்ந்து வாழ்ந்த மக்கள்தாம், குமரிக்கண்டத்தின் தொடர்ச்சியாக, இன்றுள்ள தமிழ் நாட்டில் வாழும் தமிழர்கள்.

எழுத்துமுறை தொடக்க நிலையில் பிரிந்து பிராகிருத மொழிகள் பேசிய தமிழர்கள்!

இயற்கை மொழியான தமிழ்மொழி தொடக்க எழுத்துமுறை உருவான நிலையில் இருந்த காலத்தில், பிரிந்து சென்ற மக்கள் பேசிய மொழிகளே பிராகிருத மொழிகள்;

எழுத்துமுறை ஓரளவு வளர்ந்த நிலையில் பிரிந்து வங்காளம், ஒரியா, குஜராத்தி, மராத்தி – மொழிகள் பேசிய தமிழர்கள்!

தமிழ்மொழி ஓரளவு வளர்ந்த காலத்துக்குப் பின் பிரிந்துசென்ற மக்கள் பேசும் மொழிகளே வங்காளம், ஒரியா, குஜராத்தி, மராத்தி ஆகியன;

எழுத்துமுறை நன்குவளர்ந்து – தெலுங்கு, கன்னடம், மலையாளம், துளு – ஆகிய கொடுந்தமிழ் பேசிய தமிழர்கள்!

தமிழ்மொழி நன்கு வளர்ந்த பின், கொடுந்தமிழ் என்ற நிலையில் மொழி பேசிய மக்கள் வாழ்ந்த பகுதி இன்றுள்ள ஆந்திரம், கர்நாடகம், கேரளம் ஆகியன. கொடுந்தமிழ் மொழியின் திரிமொழிகளே தெலுங்கு, கன்னடம், மலையாளம், துளு ஆகியன.

எழுத்துமுறை நன்குவளர்ந்த செந்தமிழ் பேசிய தமிழர்கள்!

செந்தமிழ் பேசிய மக்கள் புலம் பெயராமல், குமரிக்கண்டத்தை அடுத்தத் தென்கோடியில் நிலையாகத் தங்கி விட்டனர். அம்மக்களே இன்றுள்ள தமிழ்நாட்டுத் தமிழர்களின் மூதாதையர்கள். இவர்கள் உருவாக்கிய மொழியே செம்மொழியாம் தமிழ்மொழி.

இவர்களின் வழித்தோன்றல்களே தொடக்கம்-முடிவு சொல்ல இயலாத சேர,சோழ, பாண்டியர்கள்; பாண்டியர்கள் தமிழாய்ந்த முச்சங்கங்களும் கிமு. 12,000ம் — கிமு 1000-க்கும் இடைப்பட்ட காலம்.

தமிழ் மூவேந்தர்களின் தொன்மை!

பரிமேலழகர் தமது உரையில், பழங்குடிக்கு எடுத்துக்காட்டாக,

“சேர, சோழ, பாண்டியர் குடிபோலும் படைப்புக்காலம் தொட்டு மேம்பட்டு வரும் குடி” என்று

“வழங்குவதுள் வீழ்ந்தக் கண்ணும் பழங்குடிபண்பில் தலைப்பிரிதல் இன்று.”

என்ற குறள் உரையில் குறித்துள்ளார்.

வடமொழியின் முதல் காவியமான வால்மீகி இராமாயணம், சேர, சோழ, பாண்டியர் மூவரையும் குறிப்பிடுகின்றது.

கிமு. 15௦௦ ஆண்டுகளுக்கும் முற்பட்ட தொல்காப்பியம்

“வண்புகழ் மூவர் தண்பொழில் வரைப்பின்”

என்று மூவேந்தர் நாடுகளையும் குறிப்பிடுகின்றது.

கல்தோன்றி மண்தோன்றாக் காலத்தே வாளோடுமுன்தோன்றி மூத்த குடி

என்று புறப்பொருள் வெண்பாமாலை-35 கூறுகிறது.

முச்சங்கங்களின் காலம் 11,950 ஆண்டுகள்!

இறையனார் அகப்பொருளுரை முச்சங்கங்களின் கால அளவும், ஒவ்வொரு சங்கத்திலும் தமிழ் ஆய்வு செய்த புலவர்களின் எண்ணிக்கையையும் சொல்கிறது.

முதற்சங்கம் 4440 ஆண்டுகள் இருந்தது என்றும் காய்சின வழுதி முதல் கடுங்கோன் ஈறாக, 890 புலவர்கள் தமிழாய்வு செய்தது கடல் கொள்ளப்பட்ட மதுரை ஆகும்.

இடைச்சங்கம் 3700 ஆண்டுகள் இருந்தது என்றும் வெண்தேர்ச் செழியன் முதல் முடத்திருமாறன் ஈறாக, 590 புலவர்கள் தமிழாய்வு செய்தது கடல் கொண்ட கபாடபுரம் ஆகும்.

கடைச்சங்கம் 1850 ஆண்டுகள் இருந்தது என்றும் முடத்திருமாறன் முதல் உக்கிரப்பெருவழுதி ஈறாக, 490 புலவர்கள் தமிழாய்வு செய்தது உத்தர மதுரை ஆகும்.

இந்தியா முழுவதும் உள்ள ஆரியரல்லாதோர் தமிழினமக்களே!

இந்தியாவெங்கும் பல்கிப் பெருகியுள்ள, ஆரியரல்லாத ஆதித்தமிழ் மக்களினம்தான் இன்றுள்ள தமிழர்கள் தவிர்ந்த ஏனைய இந்தியர்கள்.

பகுதி-3: ஆரியர் ‘தமிழம்’ என்ற சொல்லை ‘திராவிடம்’ ஆக்கிய வரலாறு!

சிங்களம், கடாரம், ஆரியம் என்ற பெயர்கள் ‘அம்’ என்று முடிவதை நோக்குங்கள்.

நாட்டுப்பெயர்களும், மொழிகளின் பெயர்களும் இப்படி ‘அம்’ என்றே பழங்காலத்தில் முடிந்தன.

அதுபோல், ‘தமிழம்’ என்பது தமிழ் நாட்டையும், தமிழ் மொழியையும் குறித்தது. காட்டாக,

“வையக வரைப்பில் தமிழகங் கேட்ப” –

என்கிறது புறநானூறு: 168:18.

பண்டைய கிரேக்க, உரோமானிய வரலாற்று ஆசிரியர்கள் ‘தமிழகம்’ என்பதையே ‘டமிரிக்க'(Damirica) என்றும் ‘டமெரிக்கெ’ (Damarice) என்றும் திரித்து வழங்கினர்.

ஆரியர்களின் சம்ஸ்கிருத மொழியில் ‘ழ’ என்னும் எழுத்து இல்லை. தமிழ்ச் சொற்களை சமஸ்கிருதச் சொல்லாக்க ஆரியர்கள் கையாளும் சில ‘தில்லாலங்கடி’ சூத்திரங்களுள் ஒன்று,

தமிழ்ச்சொல்லின் முதல் எழுத்து உயிர்மெய் எழுத்தாக இருந்தால், உயிர் எழுத்தை நீக்கிவிட்டு உள்ள மெய்-எழுத்தோடு, ‘ர’ என்னும் எழுத்தைச் சேர்த்து புணர்எழுத்தாக மாற்றுதல் செய்து புதிய சம்ஸ்கிருத எழுத்து உருவாக்கும் உத்தி!படி (நகல் எடு என்னும் பொருளில் வரும் படி எடு) என்ற தமிழ்ச் சொல்லை எடுத்துக்கொள்ளுங்கள்.படி – என்னும் சொல்லில் முதல் எழுத்து ப = ப்+அ’அ’ வை நீக்கிவிட்டு, ‘ர’-வைச் சேர். ‘ப்ர’ வரும்.’ப்ர’ உடன் ‘டி’ சேர்த்தால், ‘ப்ரடி’ என்பது ‘ப்ரதி’ என்று மாறும். சமஸ்கிருதப் புதுச்சொல் வந்துவிட்டதா? பலே!பவளம் என்ற தமிழ்ச் சொல்லை எடுத்துக்கொள்ளுங்கள்.சொல்லின் முதல் எழுத்து ப = ப்+அ’அ’ வை நீக்கிவிட்டு, ‘ர’-வைச் சேர். ‘ப்ர’ வரும்.’ப்ர’ உடன் ‘வளம்’ சேர்த்தால், ‘ப்ரவளம்’ என்ற சமஸ்கிருதப் புதுச்சொல் வந்துவிட்டதா? பலே!தமிழம் என்ற தமிழ்ச் சொல்லை எடுத்துக்கொள்ளுங்கள்.சொல்லின் முதல் எழுத்து த = த்+அ’அ’ வை நீக்கிவிட்டு, ‘ர’-வைச் சேர். (‘த்ர’ வரும்.)’த்ர’ உடன் ‘மிழம்’ சேர்த்தால், ‘த்ரமிழம்’ ;அய்யய்யோ! ‘ழ’ சமஸ்கிருதத்தில் இல்லையே! (அதனால் என்ன? சம்ஸ்கிருதத்துல என்ன இருக்கிறது? )’ள’ இருக்கிறது. (சரி!அதைப்போடு!)’த்ரமிளம்’ வந்துவிட்டதே! (‘ள’ இன்னமும் ‘தமிழம்’ என்ற அடையாளத்தைச் சொல்லுகிறதே! )அதனால் என்ன? ‘ள’ -வுக்குப் பதில் ‘ட’ -ங்ற எழுத்துப்போலியைப் போடு!’த்ரமிடம்’ வந்து விட்டதா! (சமஸ்கிருத வழக்கப்படி, ‘ம’ எளிதாக ‘வ’ ஆகிவிடும். போலிக்குப் போலி!)’த்ரவிடம்’ – பலே! அசல் சமஸ்கிருதப் புதுச்சொல் வந்துவிட்டதே? (இதை தமிழ்நாட்டுக்குள் பரப்பு. மிச்ச-சொச்சம் தமிழ் இலக்கணப்படி மாறிவிடும்.)திரவிடம் (தமிழ் இலக்கணப்படி, ‘த்’ என்னும் மெய் எழுத்துடன், ‘அ’ சேர்க்கவேண்டும்.)திராவிடம் (தமிழனின் நீட்டு முழக்கும் பேச்சு வழக்கப்படி திராவிடம் ஆகிவிட்டது)

ஆரியர் வேலை ‘விடம்'(விஷம்) செலுத்துவது. பலன் தமிழர்கள் தொடர்ந்து கெடுவது!

அறிஞர் கால்டுவெல் பதிவிட்ட பிழை!

கால்டுவெல் அவர்கள், ‘த்ரமிளம்’ என்ற சமஸ்கிருதச் சொல்லிலிருந்துதான் ‘தமிழ்’ என்ற சொல் வந்தது என்று தவறாகக் கூறிவிட்டார். ஏனென்றால், கால்டுவெல் காலத்தில் அவருக்குத் தொல்காப்பியம் கிடைக்கவில்லை.

கால்டுவெல் அவர்கள் பார்க்கத்தவறிய உண்மையை, Linguistic Survey of India (LSI) -வுக்குத் தலைமைப் பொறுப்பேற்றிருந்த சர்.ஜார்ஜ் ஆபிரகாம் கிரையர்சன்(Sir George Abraham Grierson) என்னும் மொழியாராச்சியாளர், 1904-ல், ‘தமிழம்’ என்ற சொல்லிலிருந்தே ‘த்ரவிடம்’ என்ற சொல் உருவானது என்று நிறுவினார்.

மேலும்,

திராவிட மொழிகள் எல்லாம் ஒரு காலத்தில் தமிழாகவே இருந்ததாலும்,பழங்கால வெளிநாட்டு வரலாற்று ஆசிரியர்கள் ‘தமிழ்’ என்னும் பெயரை ஒட்டிய பெயர்களையே பதிவு செய்தமையாலும்,தமிழுக்குத் திராவிடம் என்ற பெயர் தொன்றுதொட்டு இல்லாததாலும்,தமிழம் என்ற பெயரே திராவிடம் என்று திரிந்தது

என்பது தெளிவு!

By

Krishnan Nallaperumal

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments