யாரை எங்கே வைப்பது என்று யாருக்கும் தெரியவில்லை !
2016 சட்டமன்ற தேர்தல் ஊற்றங்கரையில் ஆளும் அதிமுகவும் திமுகவும் நேரடியாக கலம் இறங்கின. அதிமுக சார்பில் ஏற்கனவே சட்டமன்ற உறுப்பினராக இருந்தவர் மீண்டும் களம் இறக்கப்பட்டார் .திமுக சார்பில் புதுமுகமாக மருத்துவத்தில் முதுநிலை பட்டம் பெற்ற மகப்பேறு மருத்துவர் மாலதி நாராயணசாமி அவர்கள் நிறுத்தப்பட்டார் தேர்தல் களம் சூடு பிடித்தது .உள்ளடி வேலைகளை அவரவர் பங்குக்கு பார்த்தார்கள். முடிவில் 2600 வாக்குகள் வித்தியாசத்தில் களத்தில் புதுமுகமாக நிறுத்தபட்ட மருத்துவர் வெற்றி வாய்ப்பை இழந்திருந்தார்
காலம் உருண்டோடியாது. வெற்றி பெற்ற சட்டமன்ற உறுப்பினர் ஊற்றங்கரையில் இருந்த வீட்டை காலி செய்துகொண்டு கிருஷ்ணகிரிக்கு இடம் பெயர்ந்துவிட்டார் .ஊற்றங்கரையின் சாலைகள் குண்டும் குழியுமாக இன்னும் பல்லிலித்து கொண்டிருக்கின்றன .கொடுக்கப்பட்ட வாக்குறுதிகள் காற்றில் கரைந்து போய்விட்டது .
தான் உண்டு தன் மருத்துவமனை உண்டு என்று இருந்த தோல்வியுற்ற மருத்துவர் தோல்விக்கு பின்னர் மக்கள் பணியில் வேகமாக பணியாற்றுகிறார். மக்கள் போராட்டங்களில் பங்கேற்கிறார்
தார் சாலையில் அமர்ந்து தர்ணா செய்கிறார். ஒற்றை ஆளாய் ரேஷன் கடையில் போராடுகிறார் . தொகுதி முழுக்க மருத்துவ முகாம் நடத்துகிறார். டெங்கு காலத்திலும் கொரனா காலத்திலும் நிவாரணப் பொருட்களை சுமந்து கொண்டு கிராமம் கிராமமாய் அலைகிறார்
சட்டமன்ற உறுப்பினராய் வெற்றி பெற்றவரை தொகுதியில் காணமுடியவில்லை .தோற்றவர் சட்டமன்ற உறுப்பினர் போல் மக்கள் பணியாற்றி கொண்டிருக்கிறார் . ஜனநாயக விசித்திரங்களில் இதுவும் ஒன்று .
பலே பாண்டியா திரைப்படத்தில் ஒலித்த
யாரை எங்கே வைப்பது என்று
யாருக்கும் தெரியல்லே
அட அண்டங் காக்கைக்கும் குயில்களுக்கும்
பேதம் புரியல்லே என்கிற பாட்டுத்தான் நினைவுக்கு வருகிறது