தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலினின் தாயார் தயாளு அம்மாளுக்கு வயது மூப்பு காரணமாக திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள அவருக்கு இன்று 2-வது நாளாகத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மருத்துவமனைக்கு நேரில் சென்ற மு.க.ஸ்டாலின், தாயாரைச் சந்தித்து நலம் விசாரித்ததுடன், சிகிச்சை குறித்து மருத்துவர்களிடம் விரிவாகக் கேட்டறிந்தார்.



