Wednesday, July 1, 2026
HomeLifestyleTips & Tricksமழைக்காலத்தில் குழந்தைகளை சளி, காய்ச்சலிருந்து பாதுகாக்கும் உணவுகள்

மழைக்காலத்தில் குழந்தைகளை சளி, காய்ச்சலிருந்து பாதுகாக்கும் உணவுகள்

மழைக்காலம் (Monsoon) வந்துவிட்டாலே பெற்றோர்களுக்கு ஒருவிதமான பயம் தொற்றிக்கொள்ளும். குழந்தைகளுக்கு எப்போது சளி பிடிக்கும், எப்போது காய்ச்சல் வரும் என்று சொல்லவே முடியாது. அடிக்கடி மருத்துவமனைக்குச் சென்று ஆன்டிபயாடிக் (Antibiotic) மருந்துகளைக் கொடுப்பதற்குப் பதிலாக, நம் வீட்டு சமையலறையில் உள்ள உணவுகள் மூலமாகவே அவர்களின் நோய் எதிர்ப்பு சக்தியை (Immunity) அதிகரிக்கலாம்.

மழைக்காலத்தில் குழந்தைகளுக்கு கட்டாயம் கொடுக்க வேண்டியவை:

  • 1. பூண்டு மற்றும் மிளகு ரசம் (Garlic & Pepper Rasam)

சளி மற்றும் தொண்டை வலிக்கு இதைவிடச் சிறந்த மருந்து வேறு எதுவும் இல்லை. மிளகு நமது நெஞ்சில் கட்டியிருக்கும் சளியை அறுத்து வெளியேற்றும் தன்மை கொண்டது. மழைக் காலங்களில் வாரத்திற்கு இரண்டு முறையாவது குழந்தைகளுக்கு மிளகு, சீரகம், பூண்டு தட்டிப்போட்ட சூடான ரச சாதம் கொடுப்பது மிகவும் நல்லது.

  • 2. மஞ்சள் பால் (Turmeric Milk)

மஞ்சள் ஒரு மிகச்சிறந்த கிருமிநாசினி (Anti-bacterial). இரவு குழந்தைகள் தூங்கச் செல்வதற்கு முன், காய்ச்சிய பாலில் சிறிதளவு சுத்தமான மஞ்சள் தூள் மற்றும் பனங்கற்கண்டு கலந்து கொடுங்கள். இது பாக்டீரியாக்களை அழித்து, நல்ல தூக்கத்தையும் தரும்.

  • 3. துளசி மற்றும் கற்பூரவல்லி தண்ணீர்

தினமும் சாதாரண தண்ணீரைக் குடிப்பதற்குப் பதிலாக, தண்ணீரை கொதிக்க வைக்கும்போது அதில் 5 துளசி இலைகள் மற்றும் ஒரு கற்பூரவல்லி (ஓமவல்லி) இலையைப் போட்டு கொதிக்க வையுங்கள். அந்த தண்ணீரையே நாள் முழுவதும் குடிக்கக் கொடுங்கள்.

  • 4. தவிர்க்க வேண்டியவை

மழைக்காலத்தில் ஃப்ரிட்ஜில் வைத்த குளிர்ந்த தண்ணீர், ஐஸ்க்ரீம், மற்றும் பேக்கரிகளில் விற்கப்படும் திறந்தவெளி இனிப்புகளை குழந்தைகளுக்கு கண்டிப்பாக கொடுக்காதீர்கள். பள்ளி விட்டு வந்ததும் வெதுவெதுப்பான நீரில் அவர்களை குளிக்க வைப்பது கிருமித் தொற்றிலிருந்து பாதுகாக்கும்.

RELATED ARTICLES

Most Popular

Cinima World