இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட முன்னறிவிப்பின்படி, தமிழகத்தில் இம்மாதம் வெப்பநிலை இயல்பை விட அதிகமாக பதிவாக வாய்ப்புள்ளது. அதிகபட்ச மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை இரண்டுமே இயல்பை விட அதிகமாக இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. உள்மாவட்டங்களில் பகல் நேர வெப்பம் கடுமையாக இருக்கும். கடலோர மாவட்டங்களில் ஓரளவு குறைந்த வெப்பம் இருக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.



