Tuesday, June 30, 2026
HomeLifestyleTips & Tricksவாட்ஸ்அப்பில் உங்களை யார் பிளாக் (Block) செய்தார்கள் என ஈஸியாக கண்டுபிடிக்கலாம்!

வாட்ஸ்அப்பில் உங்களை யார் பிளாக் (Block) செய்தார்கள் என ஈஸியாக கண்டுபிடிக்கலாம்!

வாட்ஸ்அப்பில் யாராவது ஒருவருடன் சண்டை போட்டுவிட்டாலோ, அல்லது அவர்கள் திடீரென மெசேஜ்களுக்கு ரிப்ளை செய்யவில்லை என்றாலோ, “ஒருவேளை நம்மள பிளாக் (Block) பண்ணிட்டாங்களோ?” என்ற சந்தேகம் நமக்கு வருவது சகஜம். வாட்ஸ்அப் நேரடியாக “இவர் உங்களை பிளாக் செய்துவிட்டார்” என்று எந்த நோட்டிபிகேஷனும் தராது. ஆனால், சில சிம்பிளான விஷயங்களை வைத்து அவர்கள் உங்களை பிளாக் செய்துவிட்டார்களா என்பதை 100% உறுதியாக கண்டுபிடித்துவிடலாம்.

இதோ அந்த 4 வழிகள்:

  • 1. லாஸ்ட் சீன் மற்றும் ஆன்லைன் ஸ்டேட்டஸ் (Last Seen & Online)

இதுதான் முதல் அறிகுறி. குறிப்பிட்ட நபரின் சாட்டை ஓபன் செய்ததும், அவர்களின் பெயருக்கு கீழே அவர்கள் கடைசியாக எப்பொழுது ஆன்லைனில் இருந்தார்கள் (Last Seen) அல்லது தற்போது ‘Online’-ல் இருக்கிறார்களா என்பது உங்களுக்கு காட்டாது.

  • 2. ப்ரொபைல் படம் (Profile Picture)

அவர்கள் உங்களை பிளாக் செய்திருந்தால், அவர்களுடைய டிபி (Profile Picture) திடீரென காணாமல் போய், ஒரு காலியான வெள்ளை நிற உருவம் (Blank Icon) மட்டுமே உங்களுக்குத் தெரியும்.

  • 3. ஒற்றை டிக் (Single Tick)

அவர்களுக்கு ஒரு சாதாரண மெசேஜ் அனுப்பிப் பாருங்கள். மெசேஜ் சென்றுவிட்டால் இரண்டு டிக் (Double Tick) விழும். ஆனால் அவர்கள் உங்களை பிளாக் செய்திருந்தால், அந்த மெசேஜ் என்றைக்குமே டெலிவரி ஆகாது. எத்தனை நாட்கள் ஆனாலும் ஒரே ஒரு ‘டிக்’ (Single Tick) மட்டுமே காட்டும்.

  • 4. குரூப் டெஸ்ட் (The Ultimate Group Test)

மேலே சொன்ன மூன்று விஷயங்கள் நடந்த பிறகும் உங்களுக்கு சந்தேகம் இருந்தால், இதை ட்ரை பண்ணுங்கள்.

  • வாட்ஸ்அப்பில் ‘New Group’ ஒன்றை உருவாக்குங்கள்.
  • அதில், உங்களை பிளாக் செய்ததாக நீங்கள் சந்தேகிக்கும் அந்த நபரை குரூப்பில் சேர்க்க (Add) முயற்சி செய்யுங்கள்.
  • அவர் உங்களை பிளாக் செய்திருந்தால், “You are not authorized to add this contact” என்று வாட்ஸ்அப் ஒரு எர்ரர் மெசேஜை காட்டும்.

இந்த 4 விஷயங்களும் நடந்தால், அவர்கள் உங்களை உறுதியாக பிளாக் செய்துவிட்டார்கள் என்பதை நீங்கள் உறுதிப்படுத்திக் கொள்ளலாம்!

RELATED ARTICLES

Most Popular

Cinima World