தமிழ் அறிஞர் இரா இளங்குமரனார் உரை தொகுப்பு கவிஞர் இரா .இரவி
தலைப்பு : நாமும் நம் மொழியும்
இடம் .மணியம்மையார் தொடக்கப் பள்ளி ,மதுரை
நாள் 10.6.2012
ஏற்பாடு .திரு .பி .வரதராசன் புரட்சிக் கவிஞர் மன்றம்
நம் தமிழ் மொழியை நீரில் நெருப்பில் இழந்தோம் .
புகை வண்டி ,தொடர் வண்டி ,மின் தொடர் வண்டி தொடரி என்றனர் .சரியான சொல்லாக அமைந்தது .
கல்வி என்பது நன்கு சுவற்றுக்குள் மட்டும் இல்லாமல் ஊரெல்லாம் பரவ வேண்டும் என்பதால் கல்லூரி என்று சொன்னார்கள்
அவரை ,துவரை ,சோளம் ,தினை .பனை ,,கேழ்வரகு இவை எல்லாம் காரணத்துடன் அமைந்த வேர்ச் சொற்கள் . .
பன்னீர் . பல துளிகள் சேர்ந்தது பன்னீர் என்றனர் .
மோடி மஸ்தான் சாகிப் என்பவர் பல்கலைக் கழகத்தில் உருது மொழியைக் கொண்டு வந்தார் .பலரும் இது இயலாத செயல் என்றனர் .பத்து வருடங்களில் உருது மொழியை முழுமையாகக் கொண்டு வந்துக் காட்டினார் .அந்த உள்ளம் தமிழருக்கு வேண்டும் .
குடி குடி கெடுக்கும் என்று எழுதி விட்டு குடியை கொடுக்கலாமா ?
புகை பகை புற்று நோய் வரும் என்று எழுதி விட்டு தயாரிக்கலாமா ?விற்கலாமா ?
நமது நாட்டில் சொல்லுக்கும் செயலுக்கும் ஒற்றுமை இல்லை .
பெரியார் பாராட்டிய பன்னீர் செல்வம் பற்றி இங்கே குறிப்பிட வேண்டும் .
அன்று திருவையாறு கல்லூரியில் வாடா மொழி மட்டுமே கற்பித்தனர் . 5 மாணவர்களுக்கு 9 ஆசிரியர்கள் இருந்தார்கள் பணம் செலவு செய்தனர் .சரபோஜி மன்னர் நாட்டு மொழி கற்க செலவு செய்ய எழுதி வைத்துள்ளார் என்றார்கள் .தமிழ் நாட்டில் தமிழ் தான் நாட்டு மொழி எனவே தமிழ் தான் கற்பிக்க வேண்டும் என்று வாதாடினார் .திருவையாறு கல்லூரியை தமிழ்க் கல்லூரியாக மாற்றினார் .எங்கள் மொழியும் இருக்கட்டும் என்று வட மொழி கேட்டுப் பெற்றனர் .அன்று பன்னீர் செல்வம் அவர்களுக்கு இருந்த தமிழ்ப் பற்று இன்று தமிழருக்கு இல்லை .பேராசிரியர் இலக்குவனார் படித்த கல்லூரி திருவையாறு கல்லூரி.மொழிக்காக சிறை சென்ற பேராசிரியர் . நாட்கள் சிறை சென்றவர் .மொழிப் போராளி .வேலை பறிப் போனது ,பேசக் கூ டாது ,வெளியே செல்லக் கூ டாது இப்படி பல துன்பங்களை மொழிக்காக ஏற்றவர் .
கல்லூரியில் அய்யங்கார் கட்டு ,அய்யர் கட்டு ,சைவ கட்டு ,அரை சைவ கட்டு, அசைவ கட்டு என்று பிரிவுகளாக இருந்தது உணவு உண்ணும் இடம் .அதனை முதலில் இரண்டு ஆக்கினார் .பின்னர் ஒன்றாக ஆக்கினார் .திரு பன்னீர் செல்வம் .
தமிழனுக்கு விழிப்புணர்வு வர வேண்டும் .தமிழன் கண்ணை மூடிக் கொண்டு இருந்தால் கண்ணில் மண்ணைப் போட்டு க் கொண்டே இருப்பார்கள் .
ஒருவர் விருந்து இடுகிறார் நான் இட்டப் பட்டு உண்கிறேன் .அதில் இருந்து வந்த சொல் இட்டம் .நல்ல தமிழ் சொல்லில் ஸ் சேர்த்து இஷ்ட்டம் என்று ஆக்கி வட சொல் ஆக்கி விட்டனர் .இப்படி பல சொற்கள் .
உயரம் குறைவாக இருப்பது குட்டை . ஷ் சேர்த்து குஷ்டம் ஆக்கினார்கள் .
ஒரு செயல் செய்ய முடியாமல் கட்டுண்டு கிடப்பது கட்டம் ஷ் சேர்த்து கஷ்டம் ஆக்கினார்கள் .ஒரு எழுத்தை மாற்றி நம் சொல்லையே திருடி விட்டனர் .
இப்படி திட்டமிட்டு தமிழைச் சிதைத்தனர் .
முடி வெட்டுதல் ,துணி வெட்டுதல் கலைச் சொற்கள் .கரணச் சொற்கள் .