Sunday, July 5, 2026
HomeDevotionalசிவனுக்கான நெல்லை உண்ட உறவுகளை வீழ்த்திய கோட்புலியார்

சிவனுக்கான நெல்லை உண்ட உறவுகளை வீழ்த்திய கோட்புலியார்

சோழ மன்னனின் படைத்தளபதியாக இருந்த கோட்புலி நாயனார், போர் மூலம் கிடைக்கும் செல்வங்களைக் கொண்டு சிவனடியார்களுக்குத் தொண்டு செய்து வந்தார். ஒருமுறை மன்னனின் ஆணைப்படி போருக்குச் செல்ல வேண்டி வந்தது. போருக்குப் புறப்படும் முன், தான் சேகரித்து வைத்திருந்த ஏராளமான நெல் மூட்டைகளைத் தன் உறவினர்களிடம் காட்டி, “இது ஈசனுக்குப் படைக்க வேண்டிய செந்நெல். இதை யாரும் சொந்தப் பயன்பாட்டிற்கு எடுக்கக் கூடாது” என்று சத்தியம் வாங்கிச் சென்றார்.

அவர் சென்ற சில காலத்தில், ஊரில் கடும் பஞ்சம் ஏற்பட்டது. பசி தாங்க முடியாத அவரது உறவினர்கள், ஈசனுக்குப் ஒதுக்கப்வப்பட்ட நெல் மூட்டைகளை எடுத்துச் சமைத்து உண்டனர்.

போர் முடிந்து திரும்பி வந்த கோட்புலியார், ஈசனின் நெல்லைத் தன் உறவுகள் உண்ட செய்தியைக் கேட்டுக் கொதித்தெழுந்தார். பெற்றோர், உடன்பிறந்தோர், உறவினர்கள் எனப் பாராமல், ஈசனின் நெல்லை உண்ட அனைவரையும் தன் வாளால் வெட்டி வீழ்த்தினார். அந்த நெல்லை உண்ட தாய் முலைப்பால் குடித்த ஒரு சிறு குழந்தையைக் கூட அவர் விடவில்லை!

அவரது இந்தத் தீவிரமான, அச்சமூட்டும் பக்தியைக் கண்டு ஈசன் உளம் கனிந்து நேரில் தோன்றி, “கோட்புலியே! உன் வாளுக்கு இரையான உன் உறவுகள் அனைவரும் செய்த பாவம் நீங்கி சொர்க்கத்தை அடைவார்கள். நீ எம்முடன் கயிலைக்கு வா” என்று அருள்பாலித்தார்.

RELATED ARTICLES

Most Popular

Cinima World