Home News என்எல்சிக்கு எதிரான போராட்டத்தில் அன்புமணி மீது பதியப்பட்ட வழக்கு ரத்து: ஐகோர்ட்

என்எல்சிக்கு எதிரான போராட்டத்தில் அன்புமணி மீது பதியப்பட்ட வழக்கு ரத்து: ஐகோர்ட்

0

என்எல்சிக்கு எதிராக நடந்த போராட்டத்தில் அன்புமணி மீது பதியப்பட்ட வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்தது. 2023ல் அன்புமணி தலைமையில் என்எல்சி அலுவலக நுழைவுவாயிலில் முற்றுகை போராட்டம் நடைபெற்றது. என்எல்சி விரிவாக்கத்துக்காக விளைநிலங்களை கையகப்படுத்தி நெற்பயிரை அழித்ததை எதிர்த்து போராட்டம் நடத்தப்பட்டது. தென்குத்து விஏஓ கோபாலகிருஷ்ணன் அளித்த புகாரில் அன்புமணி மீது நெய்வேலி போலீஸ் வழக்கு பதிவு செய்தது. வழக்கை ரத்து செய்யக்கோரி அன்புமணி ராமதாஸ் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்த நிலையில் ரத்து செய்யப்பட்டது.

Exit mobile version