தமிழ்நாட்டில் கடந்த 3 மாதங்களில் மட்டும் 8 சாதி ஆணவக் கொலைகள் நடந்துள்ளதாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் (விசிக) முதன்மைச் செயலாளர் ஆளூர் ஷா நவாஸ் கவலை தெரிவித்துள்ளார். ஆணவக் கொலைகளை தடுக்க தனிச்சட்டம் இயற்றப்பட வேண்டும் என்று வலியுறுத்திய அவர், முந்தைய திமுக ஆட்சியில் நீதிபதி கே.என்.பாஷா தலைமையில் அமைக்கப்பட்ட ஆணையத்தின் அறிக்கையின் அடிப்படையில் தவெக அரசு உடனடியாக சட்டம் இயற்ற வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.