கிருஷ்ணகிரி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இன்று மாலை 6 மணி முதல் பரவலாக மிதமான மழை பெய்து வருகிறது. கடந்த சில நாட்களாக நிலவிய கடும் வெயிலின் தாக்கம், இந்த திடீர் மழையால் வெகுவாகக் குறைந்து குளுமையான சூழல் உருவாகியுள்ளது. நகரின் முக்கிய வீதிகளில் குளிர்ந்த காற்று வீசி வரும் நிலையில், சில சாலைகளில் மழைநீர் தேங்கி ஓடுகிறது.
