Thursday, March 13, 2025
Google search engine
HomeCinema Worldத்ரிஷா, நயன்தாராவுடன் ஒரே நேரத்தில் ஜோடி சேரும் நிவின்பாலி

த்ரிஷா, நயன்தாராவுடன் ஒரே நேரத்தில் ஜோடி சேரும் நிவின்பாலி

மலையாள நடிகர் நிவின்பாலி, ‘பிரேமம்’ படத்தின் மூலம் புகழ் பெற்றவர். இவர் தற்போது தமிழில் ‘ரிச்சி’ படத்தில் நடித்திருக்கிறார். விரைவில் இந்த படம் திரைக்கு வருகிறது.
அடுத்து இவர் நடிக்கும் ‘ஹே ஜூட்’ என்ற மலையாள படத்தில் திரிஷாவுடன் ஜோடி சேருகிறார். இந்த படத்தை ஷியாம் பிரசாத் இயக்குகிறார். இதை தொடர்ந்து ‘லவ் ஆக்‌ஷன் டிராமா’ என்ற மலையாள படத்தில் நிவின் பாலி ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார். இந்த படத்தை தியான் சீனிவாசன் இயக்குகிறார்.
திரிஷாவுடன் நிவின்பாலி நடிக்கும் ‘ஹேஷூட்’ படம் கடந்த வாரம் தொடங்கியது. நயன்தாராவுடன் ஜோடி சேரும் ‘லவ்ஆக்‌ஷன் டிராமா’ படப்பிடிப்பு விரைவில் ஆரம்பமாகிறது.
தென் இந்திய பிரபல நாயகிகளுடன் நிவின்பாலி ஒரே நேரத்தில் ஜோடி சேர்ந்து நடிப்பது, முன்னணி நாயகர்களுக்கு ஆச்சர்யத்தை ஏற்படுத்தி இருக்கிறது. ஆனால் தற்போது மலையாளத்தில் அனைவராலும் பாராட்டப்படும் நிவின்பாலியுடன் இவர்கள் நடிப்பது ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது.
RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments