அதிகாலையில் எழுந்திருக்க வேண்டுமா? இந்த சைக்காலஜிக்கல் ட்ரிக்ஸைப் பயன்படுத்துங்கள்:
1. 5-Second Rule: அலாரம் அடித்ததும் 5,4,3,2,1 என்று பின்னோக்கி எண்ணுங்கள். 1 என்றதும் எந்த யோசனையும் இல்லாமல் எழுந்து உட்காருங்கள்.
2. தூரமான இடம்: அலாரத்தை படுக்கைக்கு அருகில் வைக்காமல், அறைக்கு வெளியே அல்லது தூரமான இடத்தில் வையுங்கள். அதை ஆஃப் செய்ய எழுந்து நடக்கும்போதே தூக்கம் கலைந்துவிடும்.
3. ஒரு காரணத்தை உருவாக்குங்கள்: வெறும் எழுந்திருக்க வேண்டும் என்று மட்டும் நினைக்காமல், காபி குடிக்கவோ அல்லது புத்தகம் படிக்கவோ ஒரு காரணத்தை முன்கூட்டியே திட்டமிடுங்கள்.