வாட்ஸ்அப்பில் யாராவது மெசேஜ் அனுப்பினால், அதை படித்ததும் அவர்களுக்கு ‘Blue Tick’ (நீல நிற டிக்) காட்டிவிடும். ஆனால், சில நேரங்களில் நாம் பிஸியாக இருப்போம், அல்லது அந்த மெசேஜுக்கு உடனே ரிப்ளை செய்ய விருப்பம் இருக்காது. அதே சமயம், அவர்கள் என்ன சொல்லியிருக்கிறார்கள் என்று படிக்கும் ஆவலும் இருக்கும்.
Read Receipts (Blue tick) ஆப்ஷனை ஆஃப் செய்யாமலேயே, அனுப்பியவருக்குத் தெரியாமல் சீக்ரெட்டாக மெசேஜை படிக்க இதோ சில சிம்பிள் ஹேக்ஸ்:
1. ஏர்பிளேன் மோட் ட்ரிக் (Airplane Mode Trick)
இது பலருக்கும் தெரிந்த பழைய ட்ரிக் என்றாலும், இன்றும் 100% வேலை செய்யும்.
- மெசேஜ் வந்தவுடன் வாட்ஸ்அப்பை ஓபன் செய்யாதீர்கள்.
- முதலில் உங்கள் மொபைலில் இன்டர்நெட்டை ஆஃப் செய்துவிட்டு, Airplane Mode-ஐ ஆன் செய்யுங்கள்.
- இப்போது வாட்ஸ்அப்பிற்குள் சென்று அந்த மெசேஜை முழுமையாக படியுங்கள்.
- படித்த பிறகு, ஆப்பை விட்டு வெளியே வந்து, Background-ல் ரன் ஆகும் வாட்ஸ்அப்பை (Recent apps) முழுமையாக க்ளோஸ் செய்துவிடுங்கள். அதன் பிறகு Airplane Mode-ஐ ஆஃப் செய்யலாம். அவர்களுக்கு Blue Tick காட்டவே காட்டாது!
2. ஹோம் ஸ்க்ரீன் விட்ஜெட் (WhatsApp Widget)
ஆண்ட்ராய்டு போன் பயன்படுத்துபவர்களுக்கு இது ஒரு அருமையான வசதி.
- உங்கள் ஹோம் ஸ்க்ரீனில் காலியாக உள்ள இடத்தில் லாங்-ப்ரெஸ் (Long press) செய்து, Widgets ஆப்ஷனுக்குச் செல்லுங்கள்.
- அதில் WhatsApp விட்ஜெட்டை தேர்ந்தெடுத்து ஹோம் ஸ்க்ரீனில் வையுங்கள்.
- இனி யார் மெசேஜ் அனுப்பினாலும், வாட்ஸ்அப்பிற்குள் செல்லாமலேயே இந்த விட்ஜெட்டில் அந்த பெரிய மெசேஜை அப்படியே முழுமையாக படித்துவிடலாம்.
3. நோட்டிபிகேஷன் பார் (Notification Bar Pull-down)
மெசேஜ் வந்தவுடன், மேலே உள்ள நோட்டிபிகேஷன் பாரை மெதுவாக கீழே இழுங்கள். சிறிய மெசேஜ் ஆக இருந்தால் அதிலேயே படித்துவிடலாம். பெரிய மெசேஜ் என்றால், அந்த நோட்டிபிகேஷனில் உள்ள சிறிய அம்புக்குறியை (Down arrow) க்ளிக் செய்தால் மெசேஜ் முழுவதும் விரிந்து காட்டும். இதிலும் ப்ளூ டிக் விழாது.
4. சர்ச் பார் (Search Bar Method)
வாட்ஸ்அப்பை ஓபன் செய்து, யார் மெசேஜ் அனுப்பினார்களோ அவர்களின் பெயரை மேலே உள்ள Search பாக்ஸில் டைப் செய்யுங்கள். இப்போது கீழே ரிசல்ட்டில் அவர்கள் கடைசியாக அனுப்பிய மெசேஜ் காட்டும். அதை வைத்து அவர்கள் என்ன அனுப்பினார்கள் என்பதை எளிதாக படித்துவிடலாம்.