பட்டுப்புடவைகளைப் பாதுகாக்க சில டிப்ஸ்:
1. காட்டன் துணி: பிளாஸ்டிக் கவரைத் தவிர்த்து, வெள்ளை காட்டன் துணியில் சுற்றி வையுங்கள்.
2. பாச்சா உருண்டைகள் வேண்டாம்: நாப்தலின் உருண்டைகளுக்குப் பதிலாக காய்ந்த வேப்பிலைகளை வையுங்கள்.
3. அவ்வப்போது மடியுங்கள்: 3 மாதங்களுக்கு ஒருமுறை மடிப்புகளை மாற்றி வையுங்கள்.
4. வெயில் வேண்டாம்: புடவைகளை நேரடி வெயிலில் காய வைக்காதீர்கள், நிழலிலேயே காய வைப்பது சிறந்தது.



