இரும்பளுக்கும் தும்பளுக்கும்
ஒரு சாதி ,
பாகிஸ்தான் , சைனா எல்லை பிரச்சனைகளையும்
தாண்டி ,
நன்றாய் நடக்குது சாதி மத சண்டை !
நியாயமான வேலைக்கும்
அநியாய லஞ்சம் ,
அரசு அலுவலகங்களின் அன்றாட
எதார்த்த நிகழ்வு !
கலவி கூத்தாடும்
காவி அவதாரங்கள் ,
கண்ணை கட்டி ஏமாத்தும்
காவி திருவிளையாடல்கள்
பிசைகாரங்களின் கணக்கில்
கோடிகணக்கில் டேபோசிட்!
குற்றவாளிகளின் கூடாரம் அரசியில் ,
கருப்பு எண்ணம் கொண்ட வெள்ளை சட்டைகாரகள் ,
ஊழல் வேட்டையில் ஊர்ரர் சொத்தெல்லாம் ,
ஒருத்தனுக்கே சொந்தமாகும் !
இயற்கையின் நியதியை செயற்கையாக
மாற்றிவிட்டான் ,
முப்போகம் விளைந்த இயற்க்கை பூமி
இவனால் இன்று தரிசாய் கிடக்குது !
பசுமை நிறைந்த கிராமத்து
காற்று போய்,
நகரத்தில் நரக வளம் வருது புழுதி!
தீர்த்தம் என்ற நதிகள் எல்லாம்
புனிதம் கெட்டு போனது,
மண்ணையும் மனிதனையும் வாழவைத்த நீர்
மாசடைந்த நீரானது ,
பாவம் போக்க தெளித்த நீர் இன்று ,
கையில் பட்டுவிட்டாலே பாவம் ஆகுது !
தொழிற்போட்டி பெருகுது