பெண்களின் தாலி பாக்கியம் நிலைத்து இருக்க இந்த வரலக்ஷ்மி நோன்பு கடைபிடிக்கப்படுகிறது. பெண்களுக்கு ஒரு கஷ்டம் என்று வந்தால் அதனை லக்ஷ்மி தேவியால் தாங்கிக்கொள்ள முடியாது. லக்ஷ்மி தேவி பொறுமையான சுபாவம் கொண்டவள். மஞ்சள் பட்டு அணிந்து அனைவருக்கும் காட்சி தருபவள். தன் கணவரான திருமாலின் மார்பில் குடியிருக்கிறார். பெண்களுக்கே சொந்தமான கருணை உள்ளம், அழகு, வெட்கம், அன்பு, புத்தி கூர்மை இவைகளையெல்லாம் ஆட்சி செய்பவள் அவளே. எல்லா வரங்களையும் நமக்கு அள்ளித்தரும் வரலக்ஷ்மியின் அருளைப்பெற இந்த ஸ்லோகத்தை உச்சரிப்போம்.
வரலக்ஷ்மி ஸ்லோகம்
ஓம் லக்ஷ்மிதேவியே நமோ நம :
ஓம் தாமரைப் பூவில் அமர்ந்தவளே நமோ நம:
ஓம் பாற்கடல் உதித்தோய் நமோ நம :
ஓம் செந்தூரத் திலகம் அணிந்தாய் நமோ நம :
ஓம் நாரணன் நெஞ்சில் நிறைந்தவளே நமோ நம :
ஓம் கருணையில் சிறந்தவளே நமோ நம :
ஓம் அலை கடலில் உதித்த ஆதிலக்ஷ்மி தாயே நமோ நம :
ஓம் அமரர்கள் துதிபாடும் அமுதமும் நீயே நமோ நம :
ஓம் அன்பர்களைக் காத்திடும் அலைமகளே நமோ
நம : ஓம் ஐஸ்வர்ய லக்ஷ்மியே நமோ நம :
ஓம் விஜயலக்ஷ்மியே நமோ நம :
ஓம் ராஜ்ய லக்ஷ்மியே நமோ நம :
ஓம் ஜயலக்ஷ்மியே நமோ நம :
ஓம் தான்ய லக்ஷ்மியே நமோ நம :
ஓம் தனலக்ஷ்மியே நமோ நம :
ஓம் தைர்ய லக்ஷ்மியே நமோ நம :
ஓம் மஹாலக்ஷ்மியே நமோ நம :
ஓம் உன்பதம் எந்நாளும் தஞ்சம் திருமகளே நமோ நம :
நோயற்ற வாழ்வு தரும் வரலட்சுமி விரதம். தேவலோகத்தில் சித்திரநேமி என்ற பெண் நீதிபதி பதவியில் இருந்து வந்தாள். தேவலோகத்தில் தேவர்களுக்கு பிரச்சனைகள் ஏற்பட்டால் பிரச்சினைகளை தீர்த்து வைக்கும் நடுவராக இருந்து தீர்ப்பு வழங்கி வந்தாள். ஒரு முறை அவள் நியாயம் எந்தப்பக்கம் இருக்கின்றது என்பதை அறிந்து கொள்ளாமல் ஒருதலைபட்சமாக தீர்ப்பினை வழங்கி விட்டாள். இதனால் கோபமடைந்த பார்வதி தேவி அவளுக்கு குஷ்டரோகம் வர சாபம் கொடுத்து விட்டாள். சித்திரநேமி சாப விமோசனத்திற்காக பார்வதிதேவியின் காலில் விழுந்த போது, ‘வரலட்சுமி விரதத்தை கடைபிடித்தால் நோய் நீங்கும்’ என பார்வதி தேவி அருள் வழங்கினாள். பூலோகம் வந்த சித்திரநேமி ஒரு குளக்கரையில் வரலட்சுமி பூஜையை செய்ததன் மூலம் சாபத்திலிருந்து விமோசனம் அடைந்தாள். தீராத நோய்நொடிகள் தீர்வதற்கும், பெண்கள் தங்கள் கணவரோடு சந்தோஷமான வாழ்க்கையை வாழவும், வரலட்சுமி விரதம் மேற்கொள்ளலாம் என்பது ஐதீகம்.