Saturday, July 4, 2026
HomeDevotionalசெந்நெல் சிந்தியதால் கழுத்தை அறுத்த அரிவாட்டாயர்

செந்நெல் சிந்தியதால் கழுத்தை அறுத்த அரிவாட்டாயர்

கண்ணமங்கலம் என்னும் ஊரில் வாழ்ந்தவர் தாயனார். நெல் விவசாயியான அவர், தான் விளைவிக்கும் செந்நெல்லில் சிறந்தவற்றை சிவபெருமானுக்கு மட்டுமே படைப்பார். அத்தோடு இளமாங்கனி மற்றும் செங்கீரையையும் படைப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தார். எப்போதும் தன் கையில் ஓர் அரிவாளை வைத்திருப்பதால் அவருக்கு ‘அரிவாட்டாய நாயனார்’ என்று பெயர்.

ஈசன் சோதனையால் அவரது ஊரில் பெரும் பஞ்சம் வந்தபோதும், தன் விரதத்தை அவர் கைவிடவில்லை. தான் பசியோடு இருந்தாலும் ஈசனுக்கான செந்நெல்லைக் கூடையிலிட்டுக் கொண்டு கோயிலுக்குச் சென்றார். பல நாட்கள் உணவில்லாததால், வழியில் அவருக்குத் தலைசுற்றல் ஏற்பட்டுத் தடுமாறி கீழே விழுந்தார்.

கூடையிலிருந்த செந்நெல், இளமாங்கனி, கீரை ஆகிய அனைத்தும் தரையிலிருந்த சேற்றில் கொட்டி வீணாயின. பதறிப்போன நாயனார், “ஐயோ! என் ஈசனுக்குப் படைக்க வேண்டிய அமுது சேற்றில் வீணாகிவிட்டதே! இந்தக் குற்றத்தைச் செய்த பிறகு நான் உயிரோடு இருக்கக் கூடாது” என்று கூறித் தன் கையிலிருந்த அரிவாளால் தன் கழுத்தை அறுக்கத் தொடங்கினார்.

அப்போது, சேற்றில் சிந்திய அந்த இளமாங்கனியை ஒரு தெய்வீகக் கரம் பூமிக்குள் இருந்து தோன்றிப் பிடித்து, “கறக், முறக்” என்று கடித்து உண்ணும் சத்தம் கேட்டது! ஈசனே நேரில் வந்து சேற்றில் சிந்திய அமுதை ஏற்றுக்கொண்டு, தன் கையால் நாயனாரின் அரிவாளைத் தடுத்து ஆட்கொண்டார்.

RELATED ARTICLES

Most Popular

Cinima World