Sunday, July 5, 2026
HomeDevotionalதிருவடியை முடியாகச் சூடிய கூற்றுவ நாயனார்

திருவடியை முடியாகச் சூடிய கூற்றுவ நாயனார்

களப்பாளர் குலத்தில் உதித்த கூற்றுவ நாயனார், மாபெரும் வீரர். சோழ, பாண்டிய, சேர மன்னர்களைப் போரில் வென்று, தமிழகம் முழுவதையும் தன் குடையின் கீழ் கொண்டு வந்தார். ஆனால், மன்னராக முறைப்படி முடிசூட்டிக்கொள்ள விரும்பிய அவர், அதற்காகத் தில்லை வாழ் அந்தணர்களான (சிதம்பரம்) தீட்சிதர்களிடம் சென்றார்.

தீட்சிதர்கள், “நாங்கள் பாரம்பரியமான சோழ மன்னர்களுக்கு மட்டுமே முடிசூட்டவோம், வேறெந்த குலத்தவருக்கும் முடிசூட்ட மாட்டோம்” என்று உறுதியாக மறுத்துவிட்டு, நாயனாருக்குப் பயந்து சேர நாட்டிற்குச் சென்றுவிட்டனர்.

நாடே தன்னிடம் இருந்தாலும், சிவனின் அடியார்களான தீட்சிதர்களைத் தண்டிக்கும் எண்ணம் கூற்றுவ நாயனாருக்கு வரவில்லை. மாறாக, சிதம்பரம் நடராஜப் பெருமானின் சந்நிதிக்குச் சென்று, “ஈசனே! உமது திருத்தொண்டர்கள் எனக்கு முடிசூட்ட மறுத்துவிட்டனர். நீயே எனக்கு முடிசூட்ட வேண்டும்” என்று மனமுருகி வேண்டினார்.

அன்று இரவு அவர் கனவில் நடராஜப் பெருமான் தோன்றி, தனது தாமரை போன்ற திருவடிகளையே நாயனாரின் தலையில் திருமுடியாகச் சூட்டினார்! மனிதர்கள் சூட்டும் வைரக் கிரீடத்தை விட, மகேசனின் பாதக் கிரீடமே மாபெரும் பேறு என்று மகிழ்ந்த கூற்றுவ நாயனார், சிவனடியாராகவே தன் நாட்டை ஆண்டு முக்தி பெற்றார்.

RELATED ARTICLES

Most Popular

Cinima World