Home national-news ஜூலை 31க்குள் பயிர்க்காப்பீடு செய்யுங்கள் – வேளாண் அமைச்சர் வினோத்

ஜூலை 31க்குள் பயிர்க்காப்பீடு செய்யுங்கள் – வேளாண் அமைச்சர் வினோத்

0

தமிழக விவசாயிகள் குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் பயிர்க்காப்பீடு செய்து கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

குறுவை நெற்பயிர்க்கு ராணிப்பேட்டை, திருவண்ணாமலை மாவட்ட விவசாயிகள் காப்பீடு செய்ய ஜூலை 15 கடைசி நாள்; மற்ற மாவட்ட விவசாயிகள் ஜூலை 31க்குள் காப்பீடு செய்து கொள்ள வேண்டும்.

கடன் பெறும் விவசாயிகள் தொடக்க வேளாண் கடன் கூட்டுறவு சங்கம், தேசிய வங்கிகள் மூலம் காப்பீடு செய்யலாம்; கடன் பெறாத விவசாயிகள் பொது சேவை மையங்கள் அல்லது தேசிய பயிர்க்காப்பீடு இணையதளத்தில் பதிவு செய்யலாம் என வேளாண்துறை அமைச்சர் வினோத் தெரிவித்துள்ளார்.

Exit mobile version