சென்னை மெட்ரோ ரயில் பணிகள் காரணமாக, நாளை முதல் (ஜூன் 27) அடையாறு LB சாலையில் போக்குவரத்து மாற்றத்தை மாநகர போக்குவரத்து காவல்துறை அறிவித்துள்ளது.
இந்தச் சாலையைப் பயன்படுத்தும் வாகன ஓட்டிகள் முன்கூட்டியே தங்கள் பயணப் பாதைகளைத் திட்டமிட்டு, ஏற்படுத்தப்பட்டுள்ள மாற்று ஏற்பாடுகளைப் பின்பற்றுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
இப்பகுதியில் மெட்ரோ கட்டுமானப் பணிகள் தொடரும் நிலையில், போக்குவரத்து சீராக நடைபெற இந்த மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.



