முதுகுளத்தூரில் அய்யனார், தர்ம முனீஸ்வரர் கோயில் வளாகத்தில் சுற்றுச்சுவர் அகற்ற குழி தோண்டியபோது முதுமக்கள் தாழிகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
சுமார் 5 ஆயிரம் ஆண்டுகள் பழமையானதாகக் கருதப்படும் இந்த முதுமக்கள் தாழிகள், பல்வேறு குறியீடுகளுடன் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
இந்தக் கண்டுபிடிப்பு வரலாற்று ஆர்வலர்கள் மற்றும் தொல்லியல் ஆராய்ச்சியாளர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது; இப்பகுதியின் பழமையான பண்பாட்டுச் சிறப்பை இது எடுத்துக்காட்டுகிறது.